»   »  பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய சந்தானத்தின் 'தேனடை' நடிகை

பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய சந்தானத்தின் 'தேனடை' நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மதுமிதா.

சண்டை

சண்டை

மதுமிதா(30) சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் 10வது தெருவில் வசித்து வருகிறார். அவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா(34) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

போலீஸ்

போலீஸ்

உஷா கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்திற்கு நேற்று சென்று மதுமிதா மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் மதுமிதாவை வீடு தேடி வந்து அழைத்துள்ளனர்.

கடி

கடி

கோபம் அடைந்த மதுமிதா நேராக உஷாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே மதுமிதா உஷாவின் கையை பிடித்து கடித்துள்ளார்.

புகார்

புகார்

மதுமிதா கடித்தவுடன் வலி தாங்க முடியாமல் உஷா அவரை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதையடுத்து இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளனர்.

English summary
Actress Madhumitha bite the hand of her neighbour Usha after the latter gave a police complaint against the former.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X