வதந்திகளை பரப்பிய நெட்டிசன்கள்… பொங்கியெழுந்த நடிகை ஷர்மி: பூரி கனெக்ட்ஸ் கன்ஃபார்ம்

ஐதராபாத்: தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த ஷார்மி, இப்போது படத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான லைகர் படத்தை ஷார்மி இணைந்து தயாரித்து இருந்தார்.

இந்நிலையில், லைகர் படத்தை பூரி ஜெகன்நாத்துக்கு பதிலாக ஷார்மி தான் இயக்கியதாக தகவல் பரவியது.

நடிப்பில் இருந்து தயாரிப்புக்குச் சென்ற ஷார்மி

நடிப்பில் இருந்து தயாரிப்புக்குச் சென்ற ஷார்மி

தெலுங்கில் அடியெடுத்து வைத்த அதேவேகத்தில் தமிழிலும் படங்களில் நடித்து வந்தார் ஷார்மி. காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு போன்ற படங்களில், தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். திடீரென நடிப்பில் இருந்து விலகிய ஷார்மி, படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பெரிய பட்ஜெட் படங்களில் இணை தயாரிப்பாளராக முதலீடு செய்து வருகிறார்.

லைகர் படத்தில் வாங்கிய மரண அடி

லைகர் படத்தில் வாங்கிய மரண அடி

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியான 'லைகர்' திரைப்படம். பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தை, நடிகை ஷார்மியும் இணைந்து தயாரித்திருந்தார். குத்துச் சண்டையை பின்னணியாக வைத்து, மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக வெளியான 'லைகர்' மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால், ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து, லைகர் படக்குழுவினர் இன்னும் வெளியே வரவில்லை என சொல்லப்படுகிறது.

தோல்வியால் துவண்ட நடிகை ஷார்மி

தோல்வியால் துவண்ட நடிகை ஷார்மி

'லைகர்' படத்தின் எதிர்பாராத தோல்வியால், சில நாட்கள் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக ஷார்மி அறிவித்தார். மேலும், விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்நாத் - ஷார்மி கூட்டணியில் அடுத்ததாக உருவாகவிருந்த புதிய படமும் கேன்சல் ஆனதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகை ஷார்மி குறித்து புதிய வதந்திகள் வெளியாகின. ஏற்கனவே ஷார்மிக்கும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்துக்கும் இடையில் காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், இதற்கு பூரி ஜெகன்நாத் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

ட்விட்டரில் விளக்கம் கொடுத்த ஷார்மி

ட்விட்டரில் விளக்கம் கொடுத்த ஷார்மி

இந்நிலையில், ஷார்மிக்கும் பூரி ஜெகன்நாத்துக்கும் இருக்கும் நெருக்கம் காரணமாக, 'லைகர்' படத்தை ஷார்மி தான் இயக்கினார் எனவும், பூரி ஜெகன்நாத்தின் பெயரை இயக்குநர் என சேர்த்துக்கொண்டதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதனால் தான் லைகர் படம் தோல்வியடைந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதனை மறுத்துள்ள ஷார்மி, "என்னை பற்றியும் பூரி ஜெகன்நாத் குறித்தும் வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான். இதனை யாரும் நம்ப வேண்டாம், பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை நாங்கள் இணைந்து மேம்படுத்துவோம்" என டிவிட்டரிலேயே விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X