Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 மாதங்களுக்கு முன்பே சித்ராவுடன் திருமணம் முடிந்துவிட்டது.. போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!
சென்னை: நடிகை சித்ராவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹேம்நாத் போலீஸில் அளித்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா, சென்னை நசரத் பேட்டை அருகே உள்ளே ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்படி என்ன அவசரம் முல்லை.. விஜே சித்துவின் திடீர் தற்கொலையால் கதறி அழும் ரசிகர்கள் #RIpmullai
அவர் தனது வருங்கால கணவரான ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஏதோ மர்மம்
குறிப்பாக சித்ராவின் கன்னத்திலும் உடம்பிலும் இருந்த காயங்கள் அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு தனது வருங்கால கணவரான ஹேம்நாத்துடன் வந்துள்ளார் சித்ரா.

தூக்கில் தொங்கிய சித்ரா
பின்னர் 3 மணியளவில் குளிக்கப்போவதாக கூறி ஹேம்நாத்தை வெளியே போக சொன்னதாகவும் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் நிர்வாகத்திடம் மாற்றுச்சாவி வாங்கி அறைக்கதவை திறந்துள்ளார் ஹேம்நாத். அப்போத ஃபேனில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கிடந்துள்ளார் சித்ரா.

பிரேத பரிசோதனை
இதனால் அதிர்ச்சியடைந்த ஹேம்நாத் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹேம்நாத்திடம் விசாரணை
மேலும் சித்ராவின் கன்னத்தில் இருந்த காயம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவருடன் அறையில் தங்கியிருந்த வருங்கால கணவரான ஹேம்நாத்திடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே திருமணம்
போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் ஹேம்நாத்
பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது, தனக்கும் சித்ராவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.

அக்.19ல் திருமணம்
இருவருக்கும் அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார் ஹேம்நாத். நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது, அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சல்
மேலும் ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்கு வந்தது முதலே சித்ரா மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார் ஹேம்நாத். இதனை தொடர்ந்து பதிவு திருமணம் செய்த சான்றிதழை சமர்ப்பிக்குமாறு ஹேம்நாத்திடம் போலீசார் அறிவுறுத்தினர்.

ஆர்டிஓ விசாரணை
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில் சித்ராவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.