»   »  அதெப்படி என்பேரை சொல்லாம விட்டே.... தன்ஷிகாவை அழ வைத்த டிஆர்!

அதெப்படி என்பேரை சொல்லாம விட்டே.... தன்ஷிகாவை அழ வைத்த டிஆர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை தன்ஷிகா 'கபாலி' படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமாகிவிட்டார். இப்போது சில படங்களில் நடித்துவருகிறார்.

'அவள் பெயர் தமிழரசி' படத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கும் 'விழித்திரு' படத்தில் தன்ஷிகா, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு எனப் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

விழித்திரு :

விழித்திரு :

எழுத்தாளர் மீரா கதிரவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்னாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். 'விழித்திரு' படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

டி.ஆரை மறந்த தன்ஷிகா :

டி.ஆரை மறந்த தன்ஷிகா :

படத்தில் தன்ஷிகா, டி.ராஜேந்தரின் ரசிகையாக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் நடிகை தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார்.

 விளாசிய டி.ஆர் :

விளாசிய டி.ஆர் :

பின்னர் பேசிய டி.ராஜேந்தர், 'கபாலி' படத்தில் நடித்திருந்தாலும் மரியாதை தெரிந்திருக்க வேண்டும், மேடை நாகரீகம் வேண்டும் என தன் பாணியில் அடுக்குமொழியில் பேசி தன்ஷிகாவை வறுத்தெடுத்து விட்டார்.

கண்கலங்கிய தன்ஷிகா :

கண்கலங்கிய தன்ஷிகா :

டி.ஆர் பேசியதை சற்றும் எதிர்பார்க்காத தன்ஷிகா மேடையிலேயே கண் கலங்கத் தொடங்கிவிட்டார். இது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.பிறகு அவரே சமாதானமாகிவிட்டார். 'விழித்திரு' படம் அக்டோபர் 6-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

English summary
Dhansika, Krishna and Vidharth are acting in the film 'Vizhithiru' directed by writer Meera Kathiravan. T.Rajendar has sung a song in this movie. Dhansika talked in pressmeet and forgot to mention TR's name. So, TR scolded her openly by his rhyming dialogues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil