நடிகை தேவயானியின் தாயார் காலமானார்.. திரை பிரபலங்கள் இரங்கல்
சென்னை: தமிழ் திரைத்துறையில் அக்கா தம்பி பிரபலங்களான தேவயானி, நகுல் ஆகியோரின் தாயார் காலமானார்.
காதல் கோட்டை, சூர்ய வம்சம், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் தேவயானி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளிடையேயும் பெரும் பிரபலமானார்.

தேவயானியின் தம்பி
இவரது தம்பி நகுல். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தேவயானியின் தாயார் மரணம்
இந்நிலையில் தேவயானி, நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த லக்ஷ்மி நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர்.

உடல் நலக்குறைவு
இவர் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்ட லக்ஷ்மிக்கு தேவயானி, நகுல், மையூர் ஆகிய 3 பிள்ளைகள். சென்னையில் வசித்து வந்த லக்ஷ்மி ஜெய்தேவ் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆறுதல்
இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரை இழந்து சோகத்தில் இருக்கும் தேவயானி, நகுல் குடும்பத்திற்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்தினர் சோகம்
கடந்த ஆண்டு தான் நகுல், தேவயானியின் தந்தை காலமானார். அவர் இறந்த சில மாதங்களிலேயே அவர்களின் தாயாரும் மரணமடைந்திருப்பது, குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











