»   »  ரஜினியுடன் நடிக்கத் தடுமாறும் 'பரதேசி' தன்ஷிகா

ரஜினியுடன் நடிக்கத் தடுமாறும் 'பரதேசி' தன்ஷிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கிய தன்ஷிகா ரஜினியுடன் கபாலி படத்தில் நடிக்க மிகவும் தடுமாறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் பேராண்மை படத்தின் மூலம் அறிமுகமான தன்ஷிகா தொடர்ந்து மாஞ்சா வேலு, அரவான் பரதேசி மற்றும் விழித்திரு போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.


Actress Dhansika Struggle with Rajini

இந்நிலையில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு தன்ஷிகாவிற்கு இயக்குநர் ரஞ்சித் மூலமாகக் கிடைத்தது. ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கும் வாய்ப்பை தன்ஷிகா பெற்றார்.


இந்நிலையில் தற்போது ரஜினியுடன் நடிக்க தன்ஷிகா மிகவும் தடுமாறுவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஷூட்டிங்கின்போது, ரஜினியுடன் ஓடி வருவது போன்ற 2 காட்சிகளில் நிலை தடுமாறிக் கீழே விழுந்துள்ளார் தன்ஷிகா.


Actress Dhansika Struggle with Rajini

2 முறை கீழே விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு மற்றும் கால் முட்டியில் கடுமையான காயம் ஏற்பட்டதாம். இதனால் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.


2 நாள் ஓய்விற்குப் பின்னர் தற்போது மீண்டும் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தன்ஷிகா நடித்து வருகிறார். இதனைக் கேள்விப்படுபவர்கள் அரவான், பரதேசி படங்களில் வெளுத்து வாங்கிய தன்ஷிகாவா இப்படிப் பயப்படுகிறார்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

English summary
Sources Said Young and More Talented Actress Dhansika very Struggle with Rajini in Kabali Shooting Spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil