»   »  நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு... - பாடகிக்கு கிட்னியைக் கொடுத்த நடிகை

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு... - பாடகிக்கு கிட்னியைக் கொடுத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெக்ஸாஸ் : உலகப்புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் செலினா கோம்ஸ். இவரது ஒவ்வொரு பாடலும் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளும்.

சமூக வலைத்தளங்களில் செலினா கோம்ஸ் வெளியிடும் புகைப்படங்கள் குறைந்தபட்சம் 5 முதல் 10 மில்லியன் லைக்குகள் பெற்றுவிடும். இவர் எந்த அளவுக்குப் பிரபலம் என்பதை இதன் மூலமே புரிந்துகொள்ளமுடியும்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தோழி கொடுத்த உசிரு :

தோழி கொடுத்த உசிரு :

அவரது நெருங்கிய தோழியான நடிகை ஃபிரான்சியா ரைஸாதான் இவருக்குச் சிறுநீரகத்தை அளித்துள்ளார். இதுதான் உன்மையான நட்பு என சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் செலினா.

ரசிகர்கள் :

ரசிகர்கள் :

என் ரசிகர்களில் சிலர், இந்த சம்மரில் நான் ஏன் குறைவாகப் பாடினேன் எனக் கவனித்துக் கேட்டிருந்தார்கள். ஏன் என் புதிய இசையை மேம்படுத்துவதில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.பலர் தொடர்ந்து என்னை கவனித்து வருவதை, நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சை :

லூபஸ் பாதிப்பின் காரணமாக ஒரு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டி இருந்தது. இப்போது அதிலிருந்து மீண்டு வருகிறேன். எனது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக இந்த ஆபரேஷனை செய்ய வேண்டியிருந்தது.

நன்றி :

நன்றி :

இன்னும் சில மாதங்களில் நான் உங்களோடு சேர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். நான் என் குடும்பத்திற்கு மற்றும் அறுவை சிகிச்சைக்கு உதவி புரிந்த மருத்துவர்களுக்கு, பணிபுரிந்தவர்களுக்கு எல்லோருக்கும் பகிரங்கமாக நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நன்றி சொல்ல வார்த்தை இல்லை :

நன்றி சொல்ல வார்த்தை இல்லை :

இறுதியாக, என் அழகான தோழி ஃபிரான்சியா ரைஸாவுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவள் எனக்கு சிறுநீரகத்தை நன்கொடையாக அளித்ததன் மூலம் மிகப்பெரிய பரிசு கொடுத்திருக்கிறாள். எனக்காக ஒரு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறாள்.

லவ் யூ தோழி :

லவ் யூ தோழி :

நான் நம்பமுடியாத ஆசீர்வாதம் இது. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இத்தனைக்குப் பிறகும் லூபஸ் பாதிப்பு முழுமையாகத் தீருமா எனத் தெரியவில்லை. ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.' எனத் தெரிவித்திருக்கிறார்.

English summary
One of the world's most famous singer is Selena Gomez. She recently underwent kidney transplant. The donor is none other that her actress friend Francia Raisa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil