»   »  ஓடும் காரில் பலாத்கார முயற்சி: இயக்குனர், ஹீரோ மீது நடிகை போலீசில் புகார்

ஓடும் காரில் பலாத்கார முயற்சி: இயக்குனர், ஹீரோ மீது நடிகை போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெலுங்கு நடிகை ஒருவர் விஜயவாடா போலீசில் புகார் அளித்துள்ளார்.

வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஒருவர் விஜயவாடா காவல் நிலையத்தில் இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் மீது புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

Actress gives complaint against director, actor

படப்பிடிப்புக்காக பீமாவரம் செல்ல வேண்டியிருந்தது. நான் ரயிலில் வருகிறேன் என்று கூறினேன். அதற்கு நடிகர் ஸ்ருஜன் மற்றும் இயக்குனர் சலபதி என்னை காரில் அழைத்துச் செல்வதாக கூறினார்கள்.

காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை யாரிடமாவது கூறினால் உன் கெரியர் காலி, பட வாய்ப்பே கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள்.

அவர்களிடம் இருந்து தப்பியோடி காவல் நிலையம் வந்தேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லையாம். ஆனால் இயக்குனரை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
An upcoming telugu actress has given a complaint against director Chalapati and actor Srujan accusing them of trying to rape her while going for a film shooting in a car.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil