திருமணத்தை உறுதிப்படுத்திய ஹன்சிகா..ஈஃபில் டவர் முன் காதலருடன் ரொமான்ஸ்..பரபரக்கும் ஸ்டில்ஸ்

சென்னை: ஹன்சிகாவின் நடிப்பில் கடைசியாக 'மஹா' திரைப்படம் வெளியாகியிருந்தது, இதில், சிம்புவும் நடித்திருந்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஹன்சிகா தனது காதலருடன் ரொமான்ஸ் செய்த போட்டோஸ் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளன.

ஹன்சிகாவுக்கு திருமணம்

ஹன்சிகாவுக்கு திருமணம்

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2011 முதல் தமிழ்ப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்கள் மூலம் அடியெடுத்து வைத்த ஹன்சிகா, விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், ஹன்சிகாவுக்கும் அவரது பாய் ஃபிரண்டுக்கும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹன்சிகாவின் காதலர், அவரது பிசினஸ் பார்ட்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் ரொமான்ஸ் செய்த ஜோடி

பாரிஸில் ரொமான்ஸ் செய்த ஜோடி

ஹன்சிகாவின் திருமணம் குறித்து செய்திகள் சில தினங்களாக வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹன்சிகா ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பிசினஸ் செய்து வருகிறார். அதில், சோஹைல் கதுரியா என்பவரும் ஹன்சிகாவின் பார்ட்னராக இணைந்துள்ளார். அவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் டவர் முன்பு, தங்களது காதலை உறுதி செய்துள்ளனர். 'மேரி மீ' என்ற கேப்ஷனுடன் ஆர்ட்டின் நடுவில் இருக்கும் ஹன்சிகாவும் சோஹைல் கதூரியாவும் க்யூட்டாக ரொமான்ஸ் செய்து, தங்களது காதலை தெரிவித்துள்ளனர்.

ஹன்சிகாவுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பூ

ஹன்சிகாவுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பூ

ஹன்சிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாவில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ள ஹன்சிகாவுக்கு நடிகைகள் குஷ்பு, அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளான்ர். ஹன்சிகா அறிமுகமான புதிதில், ரசிகர்கள் அவரை சின்ன குஷ்பு என அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் திருமணம்?

டிசம்பரில் திருமணம்?

ஹன்சிகாவின் திருமண விழா ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதற்காகவே அரண்மனையில் ஏராளமான அறைகள் தயார் செய்யப்பட்டு வருவதோடு, பழங்கால பாரம்பரிய முறைப்படி ஹன்சிகாவின் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட உள்ளதாம். இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X