»   »  இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்... போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நடிகை ஹேமலதா

இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்... போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நடிகை ஹேமலதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை காதலித்து கர்ப்பமாகிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்த நடிகை ஹேமலதா, இன்று இன்ஸ்பெக்டர் ஜமுனாராணி மிரட்டுவதாகக் கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஹேமலதா. சினிமா நடிகையான இவர் புல்லுக்கட்டு முத்தம்மா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Actress Hemalatha gives complaint against Police inspector

அதில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய கணவர் இளையராஜா மீதும் 2வது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் அவரது தந்தை ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலைச் சேர்ந்தவள். நான் 3 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஹைதராபாத்தில் எடிட்டிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். சினிமா மற்றும் விளம்பர படங்களை தயாரித்து வருகிறேன். நடிப்பு, எடிட்டிங் ஸ்டுடியோ மூலம் சம்பாதித்ததை எல்லாம் சினிமா படத்தை தயாரித்து இழந்து நிற்கிறேன். என்னை விட வயது குறைவான இளையராஜா என்ற நடிகர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். முயல் என்ற படத்தில் நடித்துள்ள அவர் தற்போது அண்டாவை காணோம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனது காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று இளையராஜா மிரட்டினார். அதனால் அவரை காதலித்தேன். யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள பூஜை அறையில் எனக்கு தாலி கட்டினார். கணவன், மனைவியாக வாழ்ந்ததில் நான் கர்ப்பமானேன். சினிமாவில் பெரிய ஆளாக வரும் வரை குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைக்குமாறு கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். கருவை கலைத்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய தயாராகிவிட்டார். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை என்னுடன் சேர்த்து வைக்குமாறு
புகார் அளித்தேன். இந்த புகார் மனு குறித்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து மகளிர் போலீசாரும் நடிகை ஹேமலதாவையும் அவரது கணவர் இளைய ராஜாவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நடிகை ஹேமலதா கமிஷனர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமலதா, இளையராஜா மீதான புகார் குறித்து திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐமுனா ராணி விசாரணை நடத்தினார். மகளிர் போலீசார் எனது கணவருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட என்னை எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் அவதூறான வார்த்தைகளாலும் மகளிர் போலீசார் திட்டினர். எனவே எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட வேண்டும் என்று கூறினார் ஹேமலதா.

தன்னை ஏமாற்ற முயற்சிக்கும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்த நடிகை ஹேமலதா, இன்ஸ்பெக்டர் ஜமுனாராணி மிரட்டுவதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actress Hemalatha has given a complaint against Police inspector Jamunarani murder threat case in Chennai commissioner Offier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil