தனித்தீவில் துருவ் விக்ரமுடன் தனியா இருக்கணும்..முன்னணி நடிகையின் விபரீதமான ஆசை!

சென்னை : தனித்தீவில் நடிகர் துருவ் விக்ரமுடன் தனியாக இருக்க வேண்டும் என்று முன்னணி நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி.

அந்த படத்தில் இவரின் முட்டை கண்ணுக்கு ஏற்றார் போல, " அட கோவக்காரக்கிளி முட்டைக்கண்ணு முழியே" என்று வரும் பாடல் இவருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கும். இந்த படத்தில் இவரின் நடிப்புக்காக பாராட்டுகளையும் பெற்றார்.

ஜனனி ஐயர்

ஜனனி ஐயர்

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனுடன் இணைந்து தெகிடி படத்தில் நடித்தார். வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் கலந்து கொண்டார். இந்த ரியாலிட்டி ஷோவில் மூன்றாவது ரன்னரப்பாக ஜனனி ஐயர் வந்தார். மேலும், ஜனனி ஐயர் என்ற தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலம்

ரசிகர்கள் மத்தியில் பிரபலம்

அழகான முகம்,எடுப்பான உடல் வனப்பு கொண்ட ஜனனி, அனைவரும் ரசிக்கும் வகையில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெரிதாக வெற்றி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வருகிறது.

கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

தற்போது ஜனனி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ள பஹீரா படத்தில் 8 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது மேலும், யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என அடுத்தடுத்து இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

புதிய யூடியூப் சேனலில்

புதிய யூடியூப் சேனலில்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, அவ்வப்போது தனது போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். சொந்தமாக புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கும் ஜனனி ஐயர், அதில் ஹோம் டூர், அழகு டிப்ஸ் என தகவல்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்வி பதிலுக்கு பதில் அளித்திருந்தார்.

விபரீதமான ஆசை

விபரீதமான ஆசை

அதில் ஒரு ரசிகர் விவகாரமான கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதாவது, தனித்தீவில் தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் யாருடன் இருப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஜனனி, தனித்தீவில் துருவ் விக்ரமுடன் தனியாக இருக்க விரும்புகிறேன். ஏன் என்றால், அவரின் மகான் படம் பார்த்து அன்று முதல் நான் அவரின் தீவிர ரசிகையாகி விட்டேன் என்று கூறியுள்ளார். பொது இடத்தில் இவ்வாறு இவர் கூறியதை கேட்டு ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X