ஆங்கிலப் பாடலுக்கு தோழியுடன் செம ஆட்டம் போட்ட ஜான்வி கபூர்... வைரல் வீடியோ !
சென்னை : மாலத்தீவு சென்றுள்ள ஜான்வி கபூர் ஆங்கிலப்பாடல் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ டிரெண்டாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக மாலத்தீவு நடிகைகளின் வரவால் படு பிஸியாக உள்ளது. அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
நீச்சல் குளத்தில் மிதப்பது, மிதந்து கொண்டே சாப்பிடுவது, பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட ஜான்வி கபூர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

பிரபலமானார்
தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சேக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார் ஜான்வி. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
Recommended Video

படு பிஸி
இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜெர்ரி ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். குட் லக் ஜெர்ரி திரைப்படம் தமிழில் நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
செம குத்தாட்டம்
மாலத்தீவுக்கு பல நடிகைகளும் படையெடுத்து வரும் நிலையில், நடிகை ஜான்வி கபூரும் மாலத்தீவுக்கு சென்று பிகினில் இணையத்தை தெறிக்கவிட்டு வந்தார். தற்போது இவர், தனது தோழி ஒருவருடன் ஆங்கிலப்பாடல் ஒன்று செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











