Don't Miss!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்களை ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணுறேன்...ஸ்ரீதேவி பிறந்தநாளில் உருகும் ஜான்வி கபூர்
மும்பை : இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவி, 2018 ம் ஆண்டு துபாயில் குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்ள கணவர் போனி கபூருடன் சென்றிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பிப்ரவரி 24 ம் தேதி உயிரிழந்தார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் நடிகையான ஜான்வி கபூர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த குட்லக் ஜெர்ரி படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில தமிழில் நயன்தாரா நடித்து ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

சினிமா, சோஷியல் மீடியாவில் பிஸி
ஜான்வி தற்போது Mili, Mr and Mrs Mahi, Bawaal ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஜான்வி. அதுவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பாலிவுட் தாண்டியும் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

அம்மாவின் நினைவுகள்
தனது அம்மா ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து, தனது அம்மா பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஜான்வி. தனது பேட்டிகளிலும் ஸ்ரீதேவி பற்றி அவர் குறிப்பிட தவறியதேயில்லை.

ரொம்ப மிஸ் பண்ணுறேன்
ஸ்ரீதேவியின் பிறந்தநாள், நினைவுநாள், அன்னையர் தினம் என முக்கியமான நாட்கள் அனைத்திலும் தனது அம்மாவின் நினைவுகளை ஜான்வி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஸ்ரீதேவியின் பிறந்தநாளான இன்று, தனது சிறு வயதில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பகிர்ந்து, Happy birthday Mumma. உங்களை அதிகம் மிஸ் பண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் உங்களை அதிகம் மிஸ் பண்ணுகிறேன். ஐ லவ் யூ ஃபார்எவர் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் தாங்களும் ஸ்ரீதேவியை மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். அதோடு ஜான்வி கபூருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் ஜான்வி
ஜான்வி கபூர் தனது அம்மா பற்றிய நினைவுகளை மட்டுமல்ல, அம்மா விட்டுச் சென்ற பலவற்றையும் தொடர்ந்து வருகிறார். தனது அம்மாவை போல் தனக்கும் தென்னிந்திய மொழி படங்களில் குறிப்பாக தமிழ் படங்களில் நடிக்க ஆசை என பல பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். இதே போல் ஆரம்ப காலத்தில் தனது பட ஸ்கிரிப்ட்கள் ஒவ்வொன்றையும் திருப்பதி கோயிலில் வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி கைவிட்ட பழக்கம்
ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்த பழக்கத்தை தனது அம்மா கை விட்டு விட்டதாகவும், தற்போது அதை தான் தொடர நினைத்திருப்பதாகவும் ஜான்வி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அது மட்டுமல்ல தனது அப்பாவின் பிறந்தநாள், புத்தாண்டு போன்ற நாட்களில் திருப்பதி செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.