twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண்: ஜெயலலிதாவை மறக்க முடியுமா?

    By Siva
    |

    சென்னை: ஜெயலலிதா மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் என்றும் நம் நினைவில் இருக்கும்.

    குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த ஜெயலலிதா பிற்காலத்தில் ஹீரோயினாகி வெற்றிகரமாகத் திகழ்ந்தார். சுமார் 140 படங்களில் நடித்துள்ள அவர் 1965ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை அதிகம் சம்பளம் வாங்கிய இந்திய நடிகையாக இருந்தார்.

    Actress Jaya to stay in our hearts forever

    அவர் நடித்த படங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவை வெற்றி பெற்றன. ஜெயலலிதாவின் நடிப்பில் சில முத்தான படங்கள்,

    ஆயிரத்தில் ஒருவன்

    ஜெயலலிதான் இரண்டாவது தமிழ் படத்திலேயே அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

    அடிமைப் பெண்

    அடிமைப் பெண் படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. அந்த படத்தில் சாதாரண வீட்டு பெண், ராணி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் திறமையாக நடித்தார். இந்த படத்தில் முதலில் சரோஜா தேவி நடிப்பதாக இருந்தது.

    கலாட்டா கல்யாணம்

    கலாட்டா கல்யாணம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. தன்னால் சூப்பராக காமெடி கூட செய்ய முடியும் என்பதை நிரூபித்தார் ஜெயா.

    ராமன் தேடிய சீதை

    ராமன் தேடிய சீதை படத்திற்காக ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சேர்ந்து நடித்த 26வது படமாகும்.

    ரகசிய போலீஸ் 115

    ரகசிய போலீஸ் 115 படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பல இடங்களிலும் 100 நாட்கள் ஓடியது.

    சூர்யகாந்தி

    சூர்யகாந்தி படத்தில் ஈகோ பிடித்த கணவனான முத்துராமனின் சம்பாதிக்கும் மனைவியாக நடித்திருந்தார் ஜெயலலிதா. இந்த படத்தில் அவர் இரண்டு பாடல்களும் பாடியுள்ளார்.

    சுமதி என் சுந்தரி

    சுமதி என் சுந்தரி படத்தில் சிவாஜி கணேசனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. இந்த படத்தில் அவர் நடிகையாக நடித்திருந்தார். திறம்பட நடித்த ஜெயலலிதாவுக்கு சிறந்த நடிகைக்கான மெட்ராஸ் பிலிம்பேன்ஸ் அசோசியேஷன் விருது கிடைத்தது.

    நம் நாடு

    என்.டி.ஆர்., ஜெயலலிதா நடித்த தெலுங்கு படமான கதாநாயகுடு படத்தின் தமிழ் ரீமேக்கான நம் நாடு படத்தில் எம்.ஜி.ஆருடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் ஜெயா.

    எங்கள் தங்கம்

    கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜோடி சேர்ந்தனர். இந்த படம் சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

    பட்டிக்காட்டு பொன்னையா

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ரசிகர்களுக்கு ஸ்பெஷலான படம் என்றால் அது பட்டிக்காட்டு பொன்னையா. ஏனென்றால் இது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சேர்ந்து நடித்த 28வது மற்றும் கடைசி படம் ஆகும்.

    English summary
    Above is the list of ten movies that makes Jayalalithaa live in our heart forever.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X