»   »  நிர்வாணமாக இறந்து கிடந்த துணை நடிகை ஜெயஸ்ரீ: தரையில் கிடந்த ஆணுறை

நிர்வாணமாக இறந்து கிடந்த துணை நடிகை ஜெயஸ்ரீ: தரையில் கிடந்த ஆணுறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சபர்ணாவை போன்றே துணை நடிகை ஜெயஸ்ரீயின் உடலும் லேசாக அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்துள்ளது.

சேலத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(49). துணை நடிகை. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பெரியார் வீதியில் வசித்து வந்தார்.

அவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் அவர் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீயை அக்கம்பக்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை பார்த்துள்ளனர். அப்போது ஜெயஸ்ரீ பால்கனியில் நின்றுள்ளார். அதன் பிறகு இரண்டு நாட்களாக அவரை யாரும் பார்க்கவில்லை.

துர்நாற்றம்

துர்நாற்றம்

ஜெயஸ்ரீயின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது வீட்டின் கேட் வெளியே பூட்டியிருந்தது. ஆனால் கதவு பாதி திறந்திருந்தது.

உடல்

உடல்

ஜெயஸ்ரீ படுக்கையறையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறையில் ஆணுறை ஒன்றும் கிடந்துள்ளது.

கொலை

கொலை

ஜெயஸ்ரீயை தலையணை வைத்து முகத்தை அழுத்தி கொலை செய்திருப்பது போன்று உள்ளது என்று முதல் கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சபர்ணா

சபர்ணா

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சப்ரணாவும் தனது வீட்டு படுக்கையறையில் நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Small time actress Jeyasree was found dead in her house in Chennai. She was lying on her bed in naked condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil