உனக்கு தர்ஷன் வேணுமா இல்ல அவன காயப்படுத்தனுமா? சனத்தை கேள்வி கேட்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்!

சென்னை: தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இடையே பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில் நடிகை காஜல் அதுகுறித்து டிவிட்டியிருக்கிறார்.

நடிகை சனம் ஷெட்டிக்கும் பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுக்கும் இடையிலான காதல் பிரேக்கப் ஆகிவிட்டது. தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்தார்.

மேலும் தர்ஷனுக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும் கூறினார். ஆனால் சனம் ஷெட்டி கூறிய குற்றச்சாட்டுக்களை தர்ஷன் மறுத்தார்.

பிரச்சனைக்கு காரணம்

பிரச்சனைக்கு காரணம்

சனம் ஷெட்டி தனது முன்னாள் காதலருடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக கூறிய தர்ஷன், சனம் ஷெட்டி பிகினியில் போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் இதனை கேட்டதால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றும் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என சனம் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

பிரேக்கப் பிரச்சனை

பிரேக்கப் பிரச்சனை

தான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தயாரிப்பாளர்களிடம் பேசி தனது வாழ்க்கையை அழிக்கப்பார்த்தார் என்றும் குற்றம்சாட்டினார் தர்ஷன். மேலும் சனம் ஷெட்டியை இதற்கு மேல் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் தர்ஷன் திட்டவட்டமாக தெரிவித்தார். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரேக்கப் பிரச்சனைதான் இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தர்ஷன் மேல தப்பு

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 வில் பங்கேற்றவரும் நடிகையுமான காஜல், இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் தர்ஷன் மேல தப்பு இருக்கு சனம். நான் முழுசா ஒத்துக்குறேன். உங்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. நீங்கள் அவரிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா அல்லது அவர் கஷ்டப்பட வேண்டுமா? லவ் பண்ணவங்க கஷ்டப்படுறத எந்த லவ்வரும் விரும்ப மாட்டாங்க.. நீங்க புரிஞ்சிப்பிங்கன்னு நம்புகிறேன்.

தப்பு இருக்கு

எனக்கு தெரியும். அவர்களுடைய அனைத்து இன்டர்வியூகளையும் நான் பார்த்திருக்கிறேன். அவள் உறுதுணையாக இருந்தாள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் அவளைப் புறக்கணித்துவிட்டான். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதராக, அவர் கூறுகிறார், அவருக்கு பிகினி இன்டர்வியூ பிடிக்கவில்லை (அதுவும் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு). அர்த்தமுள்ளதாக இருக்கிறது. யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரெண்டு பேரு மேலேயும் தப்பு இருக்கு. இவ்வாறு காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X