கணவருடன் அப்படியொரு லிப் லாக்..காஜல் அகர்வாலின் செம ஹாட் புகைப்படம்!

சென்னை : நடிகை காஜல் அகர்வால் தனது காதல் கணவருக்கு செம ஹாட்டாக லிப் லாக் கொடுத்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் ஏக்கபெருமூச்சுவிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிஸியான நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.

அதே போல தெலுங்கிலும், மகேஷ்பாபு, ராம்சரண், பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதால், அம்மணி கோலிவிட்டிலும், டோலிவிட்டிலும் டாப் நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே 2020ம் ஆண்டு தனது காதலர் கெளதம் கிட்சுலு என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா நேரத்தில் இவர்களின் திருமணம் நடந்ததால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து நடித்து வருகிறார்.

செல்லக்குழந்தை நீல்

செல்லக்குழந்தை நீல்

இதையடுத்து, கடந்த ஆண்டு கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியீட்டு அம்மாவாகப் போவதை உலகிற்கு தெரிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வாலுக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளதாக அறிவித்திருந்தார். குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சியையும் தாய்மை உணர்வுடன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார் காஜல்.

இந்தியன் 2 படத்தில்

இந்தியன் 2 படத்தில்

குழந்தை பிறப்புக்கு பின் உடல் எடை அதிகரித்துக் காணப்பட்ட காஜல் அகர்வால் தற்போது உடல் எடையை குறைத்து முன்பு போல ஸ்மாட் லுக்கிற்கு மாறியுள்ளார். குழந்தை பிறப்பிற்கு முன் காஜல் அகர்வால் தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். இதில் ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. அதே போல இந்தியன் 2 படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலே நடித்து வருகிறார்.

வேறலெவல் முத்தம்

வேறலெவல் முத்தம்

படங்களில் பிஸியாக நடித்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருக்கு லிப் லாக்கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் கணவர், கையில் குழந்தையை வைத்து இருக்கு காஜல் அவருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கிறார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ் மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாட்டுப்பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X