»   »  காஜல் அகர்வாலால் ஒரு கிராமத்து குடும்பத்துக்கு வந்த சோதனை!

காஜல் அகர்வாலால் ஒரு கிராமத்து குடும்பத்துக்கு வந்த சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக அரசு ஒரு குடும்பத்துக்கு வழங்கிய ஸ்மார்ட் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம் இடம்பெற்றிருந்ததால், அந்தக் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழக அரசு தற்போது பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி வருகிறது.

Actress Kajal Agarwal pics in smart ration card

இந்த ஸ்மார்ட் கார்டுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இடம்பெறும். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஒரு பெரியதம்பி, சரோஜா தம்பதியினருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில் குடும்பத் தலைவர் என்ற இடத்தில் சரோஜா பெரியதம்பி என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் சரோஜாவின் படத்துக்குப் பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றுள்ளது.

காஜல் அகர்வால் படம் உள்ள இந்த அட்டையோடு ரேஷன் கடைக்குப் போனால் பொருட்கள் வாங்க முடியுமா? நிச்சயம் முடியாது.

"இந்த அக்கா போட்டோவை பாக்கெட்ல வேணா வெச்சுக்கலாம், ரேஷன் அட்டைல வச்சா என்ன பண்றது போங்க," என்று விரக்தியுடன் கமெண்ட் அடிக்கிறார் சரோஜாவின் கணவர் பெரியதம்பி.

English summary
Actress Kajal Agarwal's pics was wrongly placed in smart ration card issued to a village family

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil