»   »  ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம்

ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.

நேற்று படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு பொழுதை கழித்தார்.

காலை

காலை

இன்று காலை அவர் 4 மணிக்கு எழுந்துள்ளார். இந்த தகவலை அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

6 மணி

6 மணி

6 மணிக்கு ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டியவர் கிளம்பவில்லை. இதையடுத்து அவருக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. நேரில் சென்று பார்த்தபோது அவர் உணர்ச்சியின்றி கிடந்தார்.

மரணம்

மரணம்

உணர்ச்சி இன்றி இருந்த கல்பனாவை அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மகள் ஸ்ரீமயி

மகள் ஸ்ரீமயி

கல்பனா திடீர் என்று மரணம் அடைந்தது திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கல்பனா மலையாள இயக்குனர் அனில் குமாரை திருமணம் செய்து கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அவர்களின் மகள் ஸ்ரீமயி கல்பனாவுடன் வசித்து வந்தார்.

English summary
Actress Kalpana passed away at a hotel in Hyderabad. She was 50.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil