For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இளம் இயக்குநரை ரகசிய திருமணம் செய்த ‘ராஜா ராணி' பட நடிகை..உண்மையை புட்டுபுட்டு வைத்த தெலுங்கு நடிகை!

  |

  சென்னை : இளம் இயக்குநருடன் ராஜா ராணி பட நடிகை ரகசியமாக குடும்பம் நடத்துவது தற்போது தெரியவந்துள்ளது.

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு திரைப்படத்தில், ஸ்ருதி ஹாசன் தோழிகளில் ஒருவராக மாலதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தன்யா பாலகிருஷ்ணா.

  ஏழாம் அறிவு படம் தான் முதல் படம் என்றாலும், தன்யா முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்ததால்,அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.

   ராஜா ராஜா சோழன் தான் பாடல் உருவாக இதுதான் காரணம்.. பல அர்த்தம் இருக்கு.. கவிஞர் மேத்தா! ராஜா ராஜா சோழன் தான் பாடல் உருவாக இதுதான் காரணம்.. பல அர்த்தம் இருக்கு.. கவிஞர் மேத்தா!

  நடிகை தன்யா பாலகிருஷ்ணா

  நடிகை தன்யா பாலகிருஷ்ணா

  பெங்களுரில் பிறந்த வளர்ந்த தன்யா, அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்திலும், நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாதால், டோலிவுட்டிற்கு சென்ற அம்மணிக்கு ஓரளவுக்கு பெயர் சொல்லும் வகையில் படங்களில் நடித்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

  ரகசியத் திருமணம்

  ரகசியத் திருமணம்

  இந்நிலையில் , தெலுங்கு நடிகையான கல்பிகா, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகை தன்யா, திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஓராண்டு ஆகியும், இதுவரை அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், தன்யா அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பட ப்ரோமோஷனுக்கு கூட வருவதில்லை என்று கூறியிருந்தார்.

  அவர் தான் காரணம்

  அவர் தான் காரணம்

  நடிகை கல்பிகா கூறிய கருத்து சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து, யூடியூபில் டிரெண்டான இந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கல்பிகா, தன்யாவே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். யூடியூப் வீடியோக்கள் ஏதேனும் வழிகாட்டுதலை மீறினால், யூடியூபருக்கு மெயில் மூலம் முறையாகத் தெரிவித்த பிறகு தான், அவை அகற்றப்படும். இந்த விஷயத்தில், எனக்கு எந்த தகவலும் வரவில்லை.

  பயப்படுகிறார்களா?

  பயப்படுகிறார்களா?

  என்னைப்பார்த்து அவர்கள் பயப்படுகிறார்களா? என்னை மிரட்ட முயற்சிக்கிறீர்களா? என எனக்கு தெரியவில்லை. ஆனால், தன்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தார். நான் அழைப்பை எடுக்கவில்லை, நான் என் பாதையில் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றார்.

  பாலாஜி மோகன்

  பாலாஜி மோகன்

  இந்த கிசுகிசுவில் சிக்கி இருக்கும் இளம் இயக்குநரான பாலாஜி மோகன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

  English summary
  actress Kalpika Ganesh claimed that Dhanya Balakrishna is married. Dhanya entered into a relationship with Kollywood filmmaker Balaji Mohan and got married to him in January this year.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X