Just In
- 13 hrs ago
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- 13 hrs ago
வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
- 13 hrs ago
காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!
- 14 hrs ago
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
Don't Miss!
- News
அடேங்கப்பா! 6 நாட்களில் ரூ 10 லட்சம் வசூல்.. கொரோனா விதிமுறைகள்.. அதிரடி காட்டும் சென்னை போலீஸ்
- Automobiles
ஃபோக்ஸ்வேகனின் அடுத்த ஐடி எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு தயார்!! ஜிடிஎக்ஸ் வெர்சனில் வருகிறது...
- Finance
அவசரமா 10 லட்சம் வேண்டுமா..? இதுதான் சரியான வழி..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…
- Sports
சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தலைவி படத்திற்காக அக்ஷய்குமார் ரகசியமாக பாராட்டினார்.. மீண்டும் பாலிவுட்டை கிழித்த கங்கனா!
சென்னை: தலைவி படத்திற்காக அக்ஷய்குமார் தன்னை ரகசியமாக பாராட்டினார் என கூறியுள்ள கங்கனா ரனாவத் பாலிவுட்டை மீண்டும் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இந்தி மட்டுமின்றி தமிழ் உட்பட மற்ற மொழி சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.
மனதில் பட்டதை பட்டென பேசும் கங்கனா ரனாவத் இதனாலேயே அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

பாலிவுட்டில் பார்ட்ஷியாலிட்டி
அவ்வப்போது பாலிவுட் சினிமாவையும் விளாசி வருகிறார் கங்கனா ரனாவத். பாலிவுட் சினிமா சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பாலிவுட்டில் பார்ட்ஷியாலிட்டி இருப்பதாகவும் சாடி வருகிறார். இதனால் பிரபலங்கள் பலருடன் கங்கனாவுக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

தலைவி படத்தில் கங்கனா
அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது முன் வைத்து வருகிறார் கங்கனா ரனாவத். இந்நிலையில் கங்கனா ரனாவத் இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்துள்ளார் கங்கனா.

பெரும் வைரல்
இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவர்களின் கேரக்டர் போட்டோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

23ஆம் தேதி ரிலீஸ்
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. தலைவி படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

ரகசியமாக பாராட்டினார்
தலைவி படத்தின் ட்ரெயிலரை பார்த்ததுமே கங்கனா ரனாவத்தின் நடிப்பை பலரும் புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் கங்கனா ரனாவத், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்
'பாலிவுட் மிகவும் விரோதமானது, என்னைப் புகழ்வது கூட மக்களை சிக்கலில் சிக்க வைக்கும், அதனால்தான் அக்ஷய்குமார் போன்ற பெரிய நட்சத்திரங்கள் கூட தலைவி பட ட்ரெயிலரை பார்த்துவிட்டு என்னை ரகசியமாக பாராட்டியுள்ளனர்.

நான் வெல்வேன்
ஆனால் ஆலியா மற்றும் தீபிகா படங்களைப் போலல்லாமல் அவர்கள் வெளிப்படையாகப் பாராட்ட முடியாது அது. மூவி மாஃபியா பயங்கரவாதம்... ஒரு கலைத் தொழிலை கலையாக பார்க்க வேண்டும். சினிமாவுக்குள் வரும்போது அரசியலில் ஈடுபடக்கூடாது, எனது அரசியல் பார்வைகள் மற்றும் ஆன்மீகம் என்னை கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் இலக்காக மாற்றக்கூடாது, ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தால், நான் வெல்வேன் என பதிவிட்டுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது
நடிகை கங்கனா ரனாவத்துக்கு 2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கனா ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.