கோவை இளம் பெண் உடை சர்ச்சை.. நடிகை கஸ்தூரி சொன்ன கருத்து.. ட்விட்டரில் அடிதடிதான் நடக்கல!
சென்னை: கோவையில் சில தினங்களுக்கு முன்னர், சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பூ மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த பூ வியாபாரிகள் அந்த மாணவியின் உடை குறித்து மோசமாக விமர்சித்தது மட்டும் இல்லாமல், இதற்கு முன்னர் இங்கு சில பல அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது. உங்களுக்கும் நேர்ந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்பது போல தெரிவித்துள்ளார். இது போல ஒரு வியாபாரி மட்டும் இல்லாமல் பலரும் அதுபோல தெரிவிப்பதை அந்த சட்டக்கல்லூரி மாணவியின் தரப்பில் பகிரப்பட்ட வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பெண்கள் எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லாதீர்கள், உங்களது பார்வையை நீங்கள் முறையாக வைத்திருங்கள் என்றும் கூறுவது அவர் தரப்பில் பகிர்ந்த வீடியோவில் பேசுவது தெரிகிறது.
கஸ்தூரியின் கருத்து: இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், " உடை என்பது அவரவர் உரிமை என்பது சரிதான் . ஆனால் இடம் பொருள் ஏவல் ஆகியவை முக்கியமல்லவா . ஆணோ பெண்ணோ , கிளப்புக்கு போடுற உடையை கோவிலுக்கு போட்டு செல்வேன் , மாடர்ன் உடையில் மார்கெட்டுக்கு போவேன் என்று சட்டம் பேசுவது தேவைதானா . இதுவா பெண்ணியம். Sleeveless பிரச்சினையே இல்லை.ஒவ்வொருவர் உடலமைப்பும் வேறு வேறு. அதை உணர்ந்து ஆடை அணியணும். உள்ளாடை தெரியுது. பாக்குறவங்க react பண்ண கூடாதுன்னா எப்படி? தமிழ்நாட்டில் ஆண்களுக்கு கூட கண்ணியமான உடை எதிர்பார்க்கிறோம். அட, வெள்ளக்காரங்க கூட இங்க வரும்போது முழு சட்டை போட்டுகிறாங்க." என்று பதிவிட்டுள்ளார்.

இணையவாசிகள் அடிதடி: இவரது பதிவுக்கு இணையவாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதில் ஒரு இணையவாசி, " நீங்க திரைல போட்டு நட்ச்ச உடையை வைத்து உங்க மேல ஒரு ஒப்பினியனுக்கு வர்றது தப்பு தானே அதுபோல தான் இதுவும். அந்த மாதிரி உடை எல்லாம் போட்டு நடிக்க கூடாதுன்னு சொன்னா உங்க பதில் என்னவாக இருந்திருக்கும்" என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு இணையவாசி, " கோவிலை தவிர்த்து மற்ற இடங்களில் பெண்கள் அவர்கள் விருப்பப்படி உடை அணிவதில் தவறு இல்லை" என்று பிற்போக்குத்தனமாக கமெண்ட் போட்டவருக்கு, " அலுவலகம்? பண்டிகை? துக்க நிகழ்வு? பிள்ளைகளின் ஸ்கூல் ? அப்புறம் அது என்ன "பெண்கள்"? முதல்ல உடை நாகரிகம் பின்பற்றவேண்டிவர்கள் ஆண்கள் நீங்க தான்" என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. மேலும் இவரது இந்த பதிவுக்கான மற்ற கமெண்ட்களைப் பார்க்கும்போது இணையவாசிகளுக்கு இடையில் அடிதடிதான் நடக்கவில்லை என்று கூறும் அளவுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











