தமிழ்நாட்டுல அரசியல் அடிப்படை தகுதியே இரண்டு பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றதா? நடிகை கஸ்தூரி கேள்வி

சென்னை: நடிகை கஸ்தூரி எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். ஏதாவது சர்ச்சை எப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளது. இல்லையென்றால் சர்ச்சையான அல்லது பரபரப்பான விஷயங்களில் மூக்கை நுழைத்து பரப்பரப்பில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். இப்படி இருக்கும்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசுலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான நிலையில், பரபரப்பாக பேசப்படும் விஷயமாக அது மாறிவிட்டது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவை பலரும் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவியுடன் 50வது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியதுடன் தொடர்பு படுத்தி வருகிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ் மருத்துவராக பணிபுரிந்து கொண்டு இருந்தபோது, அவரிடம் நர்ஸாக பணிபுரிந்த சுசிலாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, பின்னர் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது சுசிலாவுக்கு தற்போது 66 வயது ஆகிறது என்றும் கூறப்படுகிறது. ராமதாஸ்க்கு தற்போது 86 வயது ஆகிறது.

Actress Kashturi Trolls PMK Ramadoss Celebration 50th Year Wedding Anniversary With His Second Wife
Photo Credit:

இரண்டாவது மனைவி: இதனால் பலரும், ராமதாஸ்க்கு இரண்டாவது மனைவி இருப்பதே தெரியாது. எப்படி இத்தனை ஆண்டுகள் இரண்டாவது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து வெளியில் பரவலாக தெரியப்படுத்தாமல் வைத்திருந்தார் என்றும் கேள்வி கேட்டு குழம்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ராமதாஸ் தன்னை விட 20 வயது இளைய பெண்ணையா திருமணம் செய்து கொண்டார்? அதுவும் சுசிலாவுக்கு 16 வயது இருக்கும்போதா அவர் திருமணம் செய்து கொண்டார்? அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெற்ற போது, அன்புமணி ராமதாஸ்க்கு 6 வயது ஆகி விட்டதே என்று எல்லாம் பேசி வருகிறார்கள்.

அரசியல் முடிச்சு: ராமதாஸின் இரண்டாவது மனைவியுடனான திருமண நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான நிலையில் பலரும் இதை அரசியலுடன் முடிச்சு போட்டு வருகிறார்கள். அன்புமணிக்கும் ராமதாஸ்க்கும் ஏற்பட்ட கருத்து மோதல் என்பது தற்போது கட்சியை இரண்டாக பிரித்து விட்டது. அப்படி இருக்கும்போது, தனது இரண்டாவது மனைவியின் வாரிசுகளை கட்சிப் பொறுப்புகளுக்கு கொண்டுவரத்தான் ராமதாஸ் 50 வது திருமண நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Actress Kashturi Trolls PMK Ramadoss Celebration 50th Year Wedding Anniversary With His Second Wife
Photo Credit:

கஸ்தூரி ரியாக்‌ஷன்: இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவியுடனான 50 வது திருமண நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சர்ச்சையைக் கிளப்பியது. நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவை, ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதுடன் சிலர் தொடர்பு படுத்துகிறார்கள். கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " தமிழ்நாட்டுல அரசியல் அடிப்படை தகுதியே ரெண்டு பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றது தான் போல. அட போங்கய்யா .இங்க எத்தனை பிள்ளைகளோ? கட்சியை யாரு யாரு எத்தனை கூறு போட போறாங்களோ" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் 50வது திருமண நாளைக் கொண்டாடியது உண்மை என தெரிந்து கொள்ளாத, சில ராமதாஸ் அபிமானிகள் இது பொய்த் தகவல், ஏ.ஐ. ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ என்று கஸ்தூரியின் பதிவுக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X