twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அலைபேசியில் அழைத்து விளக்கினார்கள்.. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.. ரஜினி குறித்து கஸ்தூரி!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு அமெரிக்கா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

    இதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை.. விஜய்யை விமர்சித்ததால் சர்ச்சை.. நடிகர் பதிலடி! இதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை.. விஜய்யை விமர்சித்ததால் சர்ச்சை.. நடிகர் பதிலடி!

    தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    19ஆம் தேதி புறப்பாடு

    19ஆம் தேதி புறப்பாடு

    இதனால் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டார் ரஜினிகாந்த். அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி மனைவி லதாவுடன் தோஹா சென்ற அவர் அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.

     மயோ கிளினிக்

    மயோ கிளினிக்

    அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் அவர் மருத்துவ பரிசோதனை செய்து விட்டு வெளியே வந்த போட்டோக்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அமெரிக்கா தடை விதித்துள்ளது

    அமெரிக்கா தடை விதித்துள்ளது

    அதாவது, மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.

    ரஜினி எப்படி போனார்?

    ரஜினி எப்படி போனார்?

    பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் பொருந்தவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.

    மற்ற நாடுகளின் வழியாக

    மற்ற நாடுகளின் வழியாக

    தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அப்படி என்ன பாதிப்பு?

    அப்படி என்ன பாதிப்பு?

    எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மம்தான். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்?

    விதிகள் பொருந்தாது

    விதிகள் பொருந்தாது

    மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து 'ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது' போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.

    கவனமாக இருக்க வேண்டும்

    கவனமாக இருக்க வேண்டும்

    அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார். கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நன்மையில் முடிந்தது

    நன்மையில் முடிந்தது

    இந்நிலையில் நடிகை கஸ்தூரி, ரஜினியின் பயணம் குறித்த தனது கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.

    ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
    நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Actress Kasthuri gets clarification about Rajinikanth's US trip. She says She got a a call and got cleared.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X