கஸ்தூரியா இது.. அடையாளமே தெரியல..குழம்பி போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : இப்போதுள்ள சூழலில் நாளுக்குநாள் டெக்னாலஜியில் புது புது விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நம் அனைவரையும் சில சமயங்களில் சந்தோஷப்படுத்தி வருகிறது.
Recommended Video
இந்நிலையில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள பேஸ்ஆப் என்ற செயலி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதன்மூலம் ஒரு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் புகைப்படங்களில் மாற்றி காணமுடியும்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதைப் பார்த்தவர்கள் இப்போது மிகவும் குழம்பிப்போய் உள்ளனர்.

கஸ்தூரி
கஸ்தூரி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டவர் பின் பல படங்களில் நடித்து இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் முன்னணி நாயகியாகவும், குணச்சித்திர நாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெற்றிப் படங்களில்
இவ்வாறு 90களில் மிகப் பிரபலமான இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இவர் நடித்த உடன்பிறப்பு, இந்தியன், அமைதிப்படை என பல வெற்றிப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றிகரமாக வலம் வந்தார்.

சமூக அக்கறை
அதே சமயம் இவர் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தனது குரலை சமூகவலைதளங்களில் மூலமும் பல வீடியோக்களின் மூலம் தெரிவித்து வருபவர் அவ்வப்போது ஒரு சில சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.

கமல்ஹாசன்
இவ்வாறு எப்போதும் இவரைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டே இருக்கும் வேளையில் இவர் திடீரென தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக தோன்றி பின் ஓரிரு வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

முன்னுதாரணம்
இவர் அவ்வப்போது திரைப்படத்துறையில் நடக்கும் கொடுமையான பாலியல் குற்றங்கள் பற்றி மிக தைரியமாக பேசி வளர்ந்து வரும் நாயகிகளுக்கு எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

இணையத்தை கலக்கி
இவ்வாறு தன்னை பற்றிய செய்திகளை எப்போதும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது இணையத்தை கலக்கி வரும் பேஸ்ஆப் என்ற ஆப்பின் மூலம் தனது முகத்தை முற்றிலும் மாற்றி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்தோஷம்
இந்த பேஸ்ஆப்பின் மூலம் ஒருவர் தனது முகத்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற்றிக்கொள்ளலாம். இதை பலரும் பயன்படுத்தி அந்த போட்டோக்களை இணைய தளத்தில் வெளியிட்டு சந்தோஷப்பட்டு வரும் வேலையில் நடிகை கஸ்தூரி தனது போட்டோக்களை இந்த பேஸ் ஆப்பின் மூலம் ஆணாக மாற்றி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கதிர்
இதை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம கஸ்தூரியா இது அடையாளமே தெரியல என ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து வருகின்றனர். மேலும் இந்த பதிவின் கீழ் கஸ்தூரி தனது ஆண் போன்ற புகைப்படத்தை வெளியிட்டு "இது பார்க்க நன்றாக உள்ளது ஆனால் இது நான் இல்லை" என சிரித்தபடி பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு சிலர் நீங்கள் இந்த ஆண் புகைப்படத்தில் பார்க்க நடிகர் கதிர் போன்று இருக்கின்றீர்கள் எனவும் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











