ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவுக்கு ஆதரவாக பேசும் கஸ்தூரி?

சென்னை: ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்தது தொடர்பான புகாரை மேற்கோள் காட்டி நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.

Recommended Video

Actor Kalaiarasan Reveals Sarpatta Secret | Arya | Pa.Ranjith

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி அமேஸான் பிரைம்மில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை.

1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டியை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்து.

சினிமா பிரபலங்கள் பாராட்டு

சினிமா பிரபலங்கள் பாராட்டு

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி தள்ளியுள்ளனர்.

ஆர்யாவுக்கு பாராட்டு

ஆர்யாவுக்கு பாராட்டு

குறிப்பாக நடிகர் ஆர்யா படத்திற்காக உடலை வருத்திக் கொண்டதையும் அவரது அர்ப்பணிப்பையும் பார்த்து அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

கஷ்டப்படுவதாக கூறிய ஆர்யா

கஷ்டப்படுவதாக கூறிய ஆர்யா


அதாவது இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆர்யா, லாக்டவுன் நேரத்தில் தன்னிடம் தற்போது படம் இல்லை என்றும் பணத்திற்காக கஷ்டப்படுவதாகவும் கூறினார்.

ரூ. 70 லட்சம் பணம்

ரூ. 70 லட்சம் பணம்

மேலும் தன்னை விரும்புவதாகவும் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். அதோடு திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார் என்றும், பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.

பணம் அனுப்பிய ஆதாரங்கள்

பணம் அனுப்பிய ஆதாரங்கள்

இதுதொடர்பாக பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார் விட்ஜா. மேலும் ஆர்யாவுக்கு பணம் அனுப்பிய ஆதாரங்களையும், புகாருடன் விட்ஜா இணைத்திருந்தார்.

சென்னை ஹைகோர்ட்டில் புகார்

சென்னை ஹைகோர்ட்டில் புகார்


மேலும் விட்ஜா தரப்பில் சிபிசிஐடி'யிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி'க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

6 மாதத்தில் விவாகரத்து

6 மாதத்தில் விவாகரத்து

அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பணத்தை திரும்ப கேட்ட போது, மனைவி சாயிஷாவை 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆர்யா ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.

வழக்கு ஒத்தி வைப்பு

வழக்கு ஒத்தி வைப்பு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

சைட் எஃபெக்ட் இதுதான்

சைட் எஃபெக்ட் இதுதான்

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீட்வீ ட் செய்துள்ள நடிகை கஸ்தூரி, சார்பட்டா பரம்பரையின் மிகப்பெரிய வெற்றியின் எதிர்பாராத சைட் எஃபெக்ட் இதுதான். ஆர்யா உண்மையிலேயே வந்துவிட்டார் என்பதற்கு இதுபோன்ற சில சர்ச்சைகள்தான் உறுதியான சான்று என பதிவிட்டுள்ளார்.

ஆர்யா மீது பொய் புகார்?

ஆர்யா மீது பொய் புகார்?

மேலும் நேரம் கிடைத்தால் இந்த வார இறுதியில் படத்தை பார்க்க திட்டமிட்டிருப்பதாகவும் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு ஆர்யாவின் சார்பட்டா படம் ஹிட்டானதால் அவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதாக உள்ளது.

முன்பிருந்தே இருக்கிறது

முன்பிருந்தே இருக்கிறது

இதனிடையே கஸ்தூரியின் ஆர்யா குறித்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன் கூறியிருப்பதாவது, இந்த பிரச்சனை படம் வரதுக்கு முன்பிருந்தே நடக்கிறது. டிவிட்டரை வைத்துக்கொண்டு எதையாவது பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

வழக்கு பதிவு செய்யக்கூடாதா?

வழக்கு பதிவு செய்யக்கூடாதா?

மற்றொரு நெட்டிசனான இவர், ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு பெற நீங்கள் ஆர்வமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது ஒரு தவறான வழக்கு என்பதற்கு உங்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? அவருடைய சமீபத்திய திரைப்படம் நன்றாக இருந்ததால், அவர் செய்த தவறுகளுக்காக யாரும் அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று இல்லை. கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை என கூறியுள்ளார்.

காய்ச்ச மரம் கல்லடி படும்

காய்ச்ச மரம் கல்லடி படும்

மற்றொரு நெட்டிசனான இவர் காய்ச்ச மரம்னா கல்லடி படத்தான் செய்யும் ஜி, வெட்டியா இருக்குற எல்லாரும் ஒழுங்குன்னு அர்த்தம் இல்ல. அவங்க மேல கேஸ் போட்டா ஒன்னும் தேறாதுன்னு தெரிஞ்சி பண்றாங்க. ஆர்யாவுக்கு பண கஷ்டம்னா உதவி பண்ண 1000 பிரண்ட்ஸ் இருக்காங்க. அவர் ஏன் அவங்கக்கிட்ட பணம் கேட்கணும்? யாருக்கிட்டேயோ ஏமாந்துட்டு.. என்று ஆர்யாவுக்கும் கஸ்தூரிக்கும் ஆதரவாய் பதிவிட்டுள்ளார்.

துணிச்சலாக கருத்து சொல்லும் கஸ்தூரி

துணிச்சலாக கருத்து சொல்லும் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார். சினிமா, அரசியல், விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து துணிச்சலாக கருத்து தெரிவித்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் என அனைவர் குறித்தும் கஸ்தூரி பதிவிடும் கருத்துகள் சில சமயம் சர்ச்சையிலும் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X