அஜித்தின் நரைமுடியை வைத்து வம்பிழுக்கும் கஸ்தூரி...யாரைச் சொல்கிறார்? ..கொதிக்கும் நெட்டிசன்கள்

சென்னை : அஜித்தின் நரைமுடியை ஒப்பிட்டு நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள், உச்ச நடிகர்கள், மறைந்த அரசியல் தலைவர்களை வம்பிழுக்கிறாரா? எனத் தெரியாமல் நடிகை கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்து நெட்டிசன்கள் குழம்பி போய் கொந்தளித்து வருகின்றனர். இதை வைத்தே பலர் கஸ்தூரியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Recommended Video

ஜூனியர் ஏகே-வின் 7வது பிறந்த நாள்: குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்.... வைரலாகும் புகைப்படங்கள்!

நாட்டில் எது டிரெண்டிங் ஆக, பரபரப்பாக பேசப்படுகிறதோ அதை வைத்து ஏதாவது ஒரு ட்வீட் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி. அப்படி அவர் போடும் பல ட்வீட்கள் சமூக அக்கறை கொண்டதாக இருந்தாலும், சில ட்வீட்கள் சர்ச்சையில் போய் முடிந்து விடும். அவர் போட்ட ட்வீட்டை வைத்தே அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் நிகழ்வுகளும் பலமுறை நடந்துள்ளது. அப்படி ஒரு ட்வீட்டை தான் இன்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்

வலிமை படம் ரிலீசாகி வசூலை குவித்து வரும் நிலையில், அடுத்ததாக ஏகே 61 படத்திற்கு தயாராகி வருகிறார் அஜித். பல ஆண்டுகளாகவே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தான் சினிமாக்களில் தோன்றி நடித்து வருகிறார் அஜித். அவரை பார்த்தே அவரது ரசிகர்கள் பலரும் தலைக்கு டை அடிக்காமல் அஜித் ஸ்டைல் என சொல்லி, சால்ட் அண்ட் பெப்பருக்கு மாறி வருகின்றனர். விஸ்வாசம் படத்தில் முழுவதும் நரைத்த தோற்றத்துடன் டீன் ஏஜ் பெண்ணிற்கு அப்பாவாக நடித்தார் அஜித்.

டிரெண்டிங்கான அஜித்தின் குடும்ப போட்டோ

டிரெண்டிங்கான அஜித்தின் குடும்ப போட்டோ

வலிமையில் போலீஸ் கேரக்டருக்காக கருப்பான தலைமுடிக்கு மாறிய அஜித், தற்போது மீண்டும் ஏகே 61 படத்தில் வில்லன் கேரக்டருக்காக தனது ஒரிஜனல் முடி கலரில், நரைத்த நீண்ட வெள்ளை முடி தோற்றத்துடன் காணப்படுகிறார். இதே லுக்கில் அவர் தனது மகன் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று போட்டோக்கள் சில இன்று காலை முதல் டிரெண்டிங் ஆகி வருகிறது. அஜித்தின் இந்த குடும்ப போட்டோவை பதிவிட்டு இன்று ஒரு ட்வீட் போட்டுள்ளார் கஸ்தூரி.

யாரை சொல்கிறார் கஸ்தூரி

யாரை சொல்கிறார் கஸ்தூரி

அதில், "தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும் மையையும் போர்த்திக் கொள்ளும் நாட்டில் தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு. அழகான குடும்பம் சுத்தி போடுங்க" என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..ரஜினிகாந்த், ஸ்டாலின் தாக்கப்பட்டார்களா? ஒருவேளை நிர்மலா சீதாராமனை சொல்லியிருப்பாரோ. அந்த அம்மாவ அதுவே தாக்கிகுது. உங்க தலையில இருக்குறது ஒரிஜினல் நரை விழாத முடியா...டை அடிச்ச முடியா...முதல்ல நாம சரியான்னு பாக்கணும். ஒருவரை புகழனும்ன்னா தாராளமா புகழுங்க. இன்னொருத்தர் இகழ்ந்து தான் புகழணுமா என கேட்டு வருகின்றனர்.

கடைசியில உங்களுக்கே பல்ப்பா

கடைசியில உங்களுக்கே பல்ப்பா

நீங்க ஹேர் டை யூஸ் பண்ண மாட்டீங்களா என ஒருவர் கேட்டதற்கு இதுவரை அந்த அவசியம் வரவில்லை என பதிலளித்துள்ளார் கஸ்தூரி. எங்க தலய ஃபாலோ பண்ணி நீங்களும் உங்க கூந்தலுக்கு மை பூசாம வாங்க ஆண்டி. ப்ளீஸ். கொள்ளை அழகா இங்க்கீங்களா இல்லை கொல்ல அழகா இருக்கீங்களான்னு பாக்கனும். அதுதான் வலிமையை சுத்தி போட்டாச்சு. நீங்க கூட மேக் அப் போடுறீங்க. நீங்க பொய்யான ஆளுன்னு அர்த்தமா. ஏதோ பேசணும்னு பேசக் கூடாது. அடுத்த படத்துல அவரு டை அடிச்சுட்டு வந்தா என்ன பண்ணுவீங்க ஆன்ட்டி என பல விதமாக கஸ்தூரியை கலாய்த்து, வழக்கம் போல் கழுவி ஊற்றி வருகின்றனர். யாரையோ தாக்கி, அஜித்தை புகழ போய் இப்படி பல்ப் வாங்கிட்டிங்களே மேடம் என சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X