கொரோனாவின் கோரப்பசிக்கு மகனை தொடர்ந்து கணவரையும் பறிகொடுத்த பிரபல நடிகை.. சோகத்தில் தமிழ் சினிமா!

சென்னை: கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை கவிதா அடுத்த 15 நாட்களில் கணவரையும் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கவிதா தனது 11 வயதில் சினிமாவுக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரம், ஹீரோயின், கவுரத் தோற்றம், அம்மா, மாமியார் என எல்லா ரோல்களிலும் நடித்துள்ளார்.

1976ல் அறிமுகம்

1976ல் அறிமுகம்

தமிழில் 1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் சினிமா இன்டஸ்ட்ரிக்குள் கால் பதித்தார் கவிதா. அதே ஆண்டு தெலுங்கிலும் ஸ்ரீஸ்ரீ முவ்வா என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் ஏராளமான படங்கள்

தமிழில் ஏராளமான படங்கள்

தெலுங்கில் மட்டும் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவிதா. தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.

சீரியல்களில் கவிதா

சீரியல்களில் கவிதா

தற்போது 55 வயதான நடிகை கவிதா, சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறர். சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார் கவிதா.

என்றென்றும் புன்னகை

என்றென்றும் புன்னகை

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் நடித்து வருகிறார் கவிதா.

மகன் மரணம்

மகன் மரணம்

பாஜகவில் உள்ள கவிதா அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தொடங்கியதுமே படப்பிடிப்புக்கெல்லாம் நோ சொல்லி விட்டு வீட்டிலேயே இருந்தார் நடிகை கவிதா. கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடியது.

மகன் கொரோனாவுக்கு பலி

மகன் கொரோனாவுக்கு பலி

இதில் கவிதாவின் மகன் சாய் ரூப், கவிதாவின் கணவர் தசரத ராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 16ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்தார்.

கொரோனாவுக்கு கணவர் மரணம்

கொரோனாவுக்கு கணவர் மரணம்

இந்நிலையில் நடிகை கவிதா, கொரோனா பெருந்தொற்றுக்கு தனது கணவரையும் பறிகொடுத்துள்ளார். மகன் இறந்த போதே கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கவிதாவின் கணவர் தசரத ராஜ்.

பிரபலங்கள் ஆறுதல்

பிரபலங்கள் ஆறுதல்

மகன் இறந்து 15 நாட்களே ஆன நிலையில் நடிகை கவிதாவின் கணவர் இன்று மரணமடைந்துள்ளார். கொரோனாவின் கோர நாக்குகளுக்கு 15 நாட்களில் மகனையும் கணவரையும் பறிக்கொடுத்த நடிகை கவிதாவுக்கு தெலுங்கு, தமிழ் சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X