»   »  தாரை தப்பட்டையில் "கன்னடத்துக் கரகாட்டம்" காவ்யா ஷா!

தாரை தப்பட்டையில் "கன்னடத்துக் கரகாட்டம்" காவ்யா ஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தில் கன்னட நடிகை காவ்யா ஷாவும் ஒரு கரகாட்டக் கலைஞராக இன்னொரு நாயகியாக நடிக்கிறாராம்.

பரதேசி படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளி விட்டு இயக்குநர் பாலா தற்போது தாரை தப்பட்டை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் சசிக்குமார் நாயகனாக வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

Actress Kavya sha introduced in Bala’s film

அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடிக்கிறார். பாலாவே இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இப்படத்துக்கு இசை இளையராஜா. இது இளையராஜாவின் 1000மாவது படம் என்ற பெருமையையும் பெற்று வளர்ந்து வருகிறது.

கரகாட்டம்தான் இப்படத்தின் முக்கியக் கதைக் களமாகும். இதில் கரகாட்டக் கலைஞர்களாக சசிசிக்குமாரும், வரலட்சுமியும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர காவ்யா ஷா என்ற நடிகையும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

கன்னட நடிகையாவார் காவ்யா ஷா. அங்கிருந்து தமிழுக்கு வருகிறார். ஆரம்பா உள்ளிட்ட பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார் காவ்யா ஷா.

தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம். பல்வேறு பாத்திரங்களில் நடித்தவரான காவ்யா ஷா, தாரை தப்பட்டையில் கரகாட்டக் கலைஞராக நடிக்கிறாராம். இதற்காக இவருக்கு சிறப்புப் பயிற்சியும் கொடுத்துள்ளனராம்.

English summary
Actress Kavya sha acted in Bala's Tarai tappatai film. This is her first film in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil