காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ.
ரஜினி, கமல், சரத்குமார், பிரபு உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த குஷ்பூ, இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்
விஜய்யின் வாரிசு படத்தில் கூட குஷ்பூ நடித்திருந்தார், ஆனாலும் அவரது காட்சிகள் இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில், குஷ்பூ தனது காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மோட்டிவேஷனாக போஸ்ட் போட, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

பயங்கர ஸ்லிம்மான குஷ்பூ
90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த குஷ்பூ, சுந்தர் சியை திருமணம் செய்த பின்னர் சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன்பின்னர் அரசியல், சினிமா என இரு தளங்களிலும் மீண்டும் பரபரப்பாக இயங்கும் குஷ்பூ, சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அதற்காக தனது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியிருந்தார். இதனால் வாரிசு படத்தில் குஷ்பூவை ரசிக்கலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்
இதனால் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதனையடுத்து குஷ்பூவின் காட்சிகள் மட்டும் தனியாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தனது மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய குஷ்பூ, அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது குஷ்பூ காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

காலில் கட்டுடன் குஷ்பூ
குஷ்பூ தனது வலது காலின் மூட்டு பகுதியில் மிகப் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதேபோல் இரண்டு ட்ராலி சூட்கேஸ்களையும் பகிர்ந்து மோட்டிவேஷனாக கேப்ஷன் போட்டுள்ளார். அதில், "ஒரு விசித்திரமான விபத்து உங்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வலியை கொடுக்கும் போது என்ன செய்வீர்கள்?. மற்றவர்களைப் பற்றி உறுதியாக தெரியவில்லை, ஆனால், எனது பயணம் தொடரும், சாதிக்கும் வரை நிறுத்தாதே!" என பதிவிட்டுள்ளார்.

தொடரும் பயணம்
மேலும் அதில் கோயம்புத்தூர் டூ டெல்லி டூ ஹைதராபாத் டூ துபாய் என தனது பயணத் திட்டங்களையும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விபத்தில் காலில் கட்டுடன் இருந்தாலும் தனது பயணங்களை ரத்து செய்யவில்லை, தொடர்ந்து கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், துபாய் என பறந்துகொண்டே இருப்பதாக கூறியுள்ளார். முதலில் காலில் கட்டுடன் இருக்கும் குஷ்பூவின் போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள், பயணம் செய்யும் அளவிற்கு ஹெல்தியாக இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதனிடையே குஷ்பூ விரைவில் குணமடைய வேண்டும் என திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











