Don't Miss!
- News
பாகிஸ்தானில் சம்பளம் ‛கட்’.. கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடியால்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
- Finance
FII வெளியேற்றம், பட்ஜெட் 2023, பொருளாதார அச்சம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
- Sports
அஸ்வினால் ஆஸி.க்கு காத்திருக்கும் ஆபத்து.. சமாளிக்க தீவிர பயிற்சி.. ஆஸி. வீரர் ரென்ஷா நம்பிக்கை
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
என் சின்னக்குட்டி வளர்ந்துவிட்டாள்...மகளின் பிறந்த நாளுக்கு அழகாக வாழ்த்து சொன்ன குஷ்பு !
சென்னை : நடிகை குஷ்பு, தனது இளைய மகள் அனந்திதாவின் இருபதாவது பிறந்த நாளுக்கு புகைப்படத்தை வெளியிட்டு அழகாக வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புவுக்கு என்று ரசிகர்கள் மனதில் தனிஇடம் உண்டு. 80களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய குஷ்பு தற்போது வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் இவர் நடித்து விட்டார்.
வாரிசு
ஆடியோ
ரிலீஸ்ல
குஷ்பு
பத்தி
விஜய்
அவ்ளோ
பேசியிருந்தாரே...
ஆனா
படத்துல
இல்ல...
ஏன்?

நடிகை குஷ்பு
நடிப்பின் ராட்சசியான குஷ்பு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான முறைமாமன் படத்தில் கதாநாயகியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. குஷ்புவின் சுட்டித்தனமான பேச்சால் மனதை பறிகொடுத்த சுந்தர் சி தனது காதலை வெளிப்படுத்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இருவரும் அதே அன்புடன் இருக்கிறார்கள்.

தொடர்ந்து நடித்து வருகிறார்
சுந்தர் சி மற்றும் குஷ்பு தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நடிகை குஷ்பு திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தற்போது, வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்

இணையத்தில் ஆக்டிவாக
சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் தனது தடத்தை பதித்து அதில் வெற்றியும் கண்ட குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, பல சமூக பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார்.

என் சின்னக்குட்டி வளர்ந்துவிட்டாள்
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தனது இளைய மகள் அனந்திகாவின் 20வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், என் சின்னக்குட்டி வளர்ந்துவிட்டாள், இன்று அவளுக்கு 20 வயது ஆகிறது. 4 வாரங்களுக்கு முன்பு அவசரமாக பிறந்த உன்னை 4 மணிநேரம் கழித்துத்தான் கையில் கொடுத்தார்கள். நீ என்னைப் பார்த்து சிரித்ததில் இருந்து நான் என் சிரிப்பை என்றும் நிறுத்தவில்லை. நீ எப்பவும் எங்களுக்கு குட்டி பொம்மையாய் இருப்பாய். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தனது மகளுக்கு அழகாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.