Just In
- 2 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 2 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 3 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 3 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- Finance
டாப் கியரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..!
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- News
தமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்
சென்னை: பிரபல நடிகை குஷ்புவுக்கு ஒருவர் பாலியன் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரபல நடிகை குஷ்பு, 90 களில் டாப் ஹீரோயினாக இருந்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அவர், பின்னர் அரசியலுக்கு வந்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவிட்டு ஆச்சர்யப்படுத்தினார்.
தாடியும் மீசையும் தாராளமா வளர்க்குறாங்களே.. விஜய் முதல் சந்தானம் வரை.. லாக்டவுன் தந்த மாற்றம்!

யோகா ஆசனங்கள்
மேலும் மிகவும் கடினமான யோகா ஆசனங்களை வியக்கும் வகையில் செய்து அந்தப் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பு. அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். சில விஷயங்களில் அவர் கருத்து சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

ராகுலிடம் மன்னிப்பு
சமீபத்தில் கூட புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து அவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கு விளக்கம் அளித்தார் குஷ்பு. அதில், புதிய கல்விக் கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையையே பேசுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

அமைச்சர் அமித் ஷா
பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி வெளியானதும் பல்வேறு தலைவர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி டிவீட் செய்தனர். நடிகை குஷ்புவும் அமித் ஷா குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாக டிவீட் செய்திருந்தார். இதுவும் சர்ச்சையானது. சோசியல் மீடியாவில் நடிகை குஷ்புவை பலர் விமர்சித்தனர்.

பாலியல் வன்கொடுமை
அவர் பாஜகவில் சேரப் போவதாகக் கூறப்பட்டது. இதை நடிகை குஷ்பு மறுத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு ஒருவர், செல்போனில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து வருவதாக பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்துள்ளார்.

கொல்கத்தா போலீஸ்
அதில் அவர், 'இந்த எண்ணில் இருந்து எனக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றன. இவர் பெயர் சஞ்சய் சர்மா என்று வருகிறது. இது கொல்கத்தாவில் இருந்து வந்திருக்கும் அழைப்பு. இதுபற்றி கொல்கத்தா போலீஸ், விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொல்கத்தா போலீசுக்கும் அந்த ட்வீட்டை டேக் செய்துள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜி
இதையடுத்து நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு பதிவில், கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி இதுபற்றி கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கே இப்படி என்றால் மற்றப் பெண்களின் நிலையை எண்ணி பாருங்கள் என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவியுங்கள் என்று சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.