For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீங்களும் அழகாகலாம்..சிம்பிளா.. அழகா.. குஷ்பு சொன்ன பியூட்டி டிப்ஸ்!

  |

  சென்னை: நடிகை குஷ்பு தனது அழகிற்க்கு பின்னால் இருக்கும் சிம்பில் பேஸ்பேக் ரகசியத்தை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்

  நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர் சியை தமிழ்நாட்டில் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். குஷ்பு இட்லி முதல் குஷ்புவிற்கு கோவில் வரை அவரின் புகழ் வேற லெவல். ஏன்னா? குஷ்பு அவ்ளோ அழகு சார்!! என்று சொல்லும் ஆண்களும் பெண்களும் ஏராளம் .

  இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்து ப்யூட்டி ஃபார்லர்கள் மூடி இருக்கும் வேலையில், பெண்கள் தங்களை அழகுப் படுத்திக்கொள்ள என்ன செய்வது என குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில், குஷ்பு ஒரு சூப்பர் ஐடியா மற்றும் பாரம்பரிய டிப்ஸ் சொல்லியுள்ளார்.

  பொண்டாட்டிய ரசிச்சு போட்டோ எடுத்திருக்காருய்யா.. சுந்தர்சி எடுத்ததை கெத்தாய் ஷேர் செய்த குஷ்பு!

   ஹோம்மேட் பேஸ்பேக்

  ஹோம்மேட் பேஸ்பேக்

  நான் இந்த பேஸ்பேக்-ஐ என்னுடைய மகள்கள் குழந்தையாக இருக்கும்போது இந்த ஹோம்மேட் பேஸ்பேக்கை சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தினேன் என்றும், அதற்க்கு தேவையான சிம்பிள் பொருட்கள் தயிர், மஞ்சள் தூள் ஒரு பின்ச், ஒரு தேய்கரண்டி தேன், கடலை மாவு மற்றும் கொஞ்சம் குங்குமப்பூ இதனுடன் தேவையான அளவு காய்ச்சிய பால். இதையெல்லம் தேவையான அளவு சரியாக ஒன்று சேர்த்தால் ஈசியான ஹோம்மேட் பேஸ்பேக் வீட்டிலேயே ரெடி என கூறியுள்ளார்.

   அழகான மஞ்சள் பூனை

  அழகான மஞ்சள் பூனை

  அவர் செய்த பேஸ்பேக்கை முகத்தில் போட்டவாரு தனது ரசிகர்களுக்காக ஒரு புகைப்படத்தையும் தனது இஸ்டாகிராம பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. அதில், குஷ்பு, முகம் முழுக்க மஞ்சளை பூசிக் கொண்டு இருக்கிறார். கறுப்பு வெள்ளை நிற டீசர்ட்டில், முகத்தில் மஞசள் பூசி, மஞ்சள் நிற ஒரு பூனைக் குட்டி போல இருக்கிறார் குஷ்பு. இரண்டு பெண் பிள்ளைகள் பெற்ற பூனைக்குட்டி முகத்திற்கு மஞ்சள் தடவி அழகு பார்த்திருக்கிறது.

   என்றும் கனவுகன்னி

  என்றும் கனவுகன்னி

  நம்ம 90ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இதில் பிரபுவுடன் நடித்த சின்னதம்பி படம் இவருக்கான ரசிகர் பட்டாளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. 90ஸ் மட்டும் அல்ல என்றும் கனவுகன்னி இவர் தான்.

   சுந்தர்.சியின் அன்புகட்டளை

  சுந்தர்.சியின் அன்புகட்டளை

  தனது கணவர் சுந்தர்.சி இயக்கும் மற்றும் தயாரிக்கும் எந்த ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு குஷ்பு போவதில்லையாம், அப்படியே அவர் போனால் இருவருக்கும் டிஷ்யும் டிஷ்யும் என முட்டிக்கொள்ளுமாம். அதனாலேயே சுந்தர்.சி சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டுள்ளார். இதனால், குஷ்புவும் எதுக்குடா வம்பு என்று சூட்டிங் ஸ்பாட்டுக்கு போவது இல்லையாம். இதை அவரே பல மேடைகளில் நகைச்சுவையாக பகிர்ந்து இருக்கறார்

   குஷ்பு எப்போதும் குயின் தான்

  குஷ்பு எப்போதும் குயின் தான்

  பிரபல தொலைக்காட்சியான ஜெயாடிவியில் இவர் தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சியில் இவர் விதவிதமாக அணியும் ஜாக்கெட் பின் டிசைனை பார்த்து இவரது பெண் ரசிகைகள் பலர் டைலரிடம் சண்டைப்போட்டு, குஷ்பு போட்டு, அதே மாதிரி டிசைனில் ஜாக்கேட் போட்ட கதையும் நடந்துள்ளது. இந்த லிஸ்டில் குஷ்பூ சாரி, குஷ்பூ ஜிமிக்கி கம்மல், குஷ்பூ மூக்குத்தி என்று இப்போது இருக்கும் லேடஸ்ட் ஹீரோயின்ஸே பொறாமைப்படும் அளவிற்கு எப்பொழுதும் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்து கொண்டே இருக்கிறார் குயின் குஷ்பு.

   நிறைய டிப்ஸ் கொடுங்க

  நிறைய டிப்ஸ் கொடுங்க

  யார் வேண்டுமானாலும் அழகு குறிப்பு சொல்லலாம், ஆனால், குஷ்பு சொன்ன அதுக்கு ஓரு மவுசு இருக்கு என்று அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும், உங்களுடைய அழகுக்கு இதுதான் காரணமாக இத்தனை நாள் இது தெரியம போச்சே என்றும் பலர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பல ரசிகர்கள் அவரை, வர்ணித்த கொண்டு பல லைக்ஸ் அண்ட் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் பலர், உங்களை போல அழகாக ஜொலிக்க மேலும் நிறைய குஷ்பு டிப்ஸ் கொடுப்பார் என்று கூறியுள்ளனர்.

  English summary
  Actress Khushbu shares home beauty tips on her Instagram
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X