»   »  நடிகையை தலையில் அடித்துக் கொன்று, உடல் அழுகாமல் இருக்க ஏசியை போட்டுவிட்டு சென்ற கொலையாளி

நடிகையை தலையில் அடித்துக் கொன்று, உடல் அழுகாமல் இருக்க ஏசியை போட்டுவிட்டு சென்ற கொலையாளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை க்ரித்திகா சவுத்ரி ஸ்டீல் ஆயுதத்தால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசையில் சொந்த ஊரான ஹரித்வாரில் இருந்து மும்பை வந்தவர் க்ரித்திகா சவுத்ரி. கங்கனா ரனாவத்தின் ரஜ்ஜோ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் க்ரித்திகா மும்பையில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

கொலை

கொலை

க்ரித்திகாவின் உடல் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவரது தலையின் வலப்பக்கத்தில் யாரோ அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

ஏசி

ஏசி

க்ரித்திகாவை கொலை செய்த நபர் அவரது உடல் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்க வீட்டில் இருந்த ஏசியை ஆன் செய்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

வழக்கு

வழக்கு

அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே க்ரித்திகாவின் பெற்றோர் மும்பை வந்து அவரது உடலை ஹரித்வாருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

விசாரணை

விசாரணை

க்ரித்திகாவுக்கு மும்பையில் உறவினர்கள் யாரும் இல்லை. அதனால் அபார்ட்மென்ட் காவலாளி, பால்காரர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

English summary
Actress Kritika Choudhary's murder is confirmed. The culprit has left the AC on to delay the decomposing of the body.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil