»   »  சென்னை மழை: வெள்ள நிவாரணப் பணிகளில்... மகளுடன் இணைந்து களமிறங்கிய குஷ்பூ

சென்னை மழை: வெள்ள நிவாரணப் பணிகளில்... மகளுடன் இணைந்து களமிறங்கிய குஷ்பூ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பூ சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனது மகளுடன் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் கடலூர் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் பொருட்டு தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உலகைச் சேர்ந்த நடிக, நடிகையர் நிவாரணப் பொருட்களை சேகரித்து வழங்கி வருகின்றனர்.

மேலும் தங்களால் இயன்ற தொகைகளையும் தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண உதவிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ மழையில் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு நேரடியாக சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

மக்களுக்குத் தேவையான உணவு, போர்வை ஆகியவைகளை தனது இளைய மகள் அவந்திகாவுடன் (13) இணைந்து வழங்கி வருகிறார்.

"எனது இளைய மகள் என்னுடன் இணைந்து வெள்ள நிவாரணப் பணிகளில் பணியாற்ற ஆர்வம் கொண்டிருக்கிறார்" என்று குஷ்பூ இது குறித்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை தனது பணத்தில் இருந்து நிறைவேற்ற இருப்பதாகவும் குஷ்பூ கூறியிருக்கிறார்.

English summary
Chennai Rain: Actress Kushboo helps Chennai People along with her Young Daughter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil