Don't Miss!
- News
குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியீடு!
- Lifestyle
ருசியான... சோயா பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Sports
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலிலாம் எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
- Finance
FII வெளியேற்றம், பட்ஜெட் 2023, பொருளாதார அச்சம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன்!
சென்னை : சுந்தரபாண்டியன் படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் நடிகை லட்சுமி மேனன்
கும்கி,பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், றெக்க, கொம்பன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் சமீபகாலமாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
விஜய் சேதுபதி ஸ்பாட்டில் நின்னு அடிப்பார்... சீக்ரட்டை வெளிப்படுத்திய பக்ஸ்
இந்த நிலையில் காதல் காமெடி கலந்த ஏமோஷனல் திரைப்படத்தில் நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை ஈர்த்து
சசிகுமார் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து பட்டையை கிளப்பிய திரைப்படம் சுந்தரபாண்டியன். முழுக்க முழுக்க வில்லேஜ் கதை களத்தில் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் மிகப்பெரிய வெற்றி பெற்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை ஈர்த்து கனவு கன்னியாக மாறினார் லட்சுமி மேனன்

முன்னணி கதாநாயகியாக
அதைத் தொடர்ந்து வெளியான கும்கி,குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா,கொம்பன், மிருதன், றெக்க என இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார்

சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிக்காமல்
இந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக வேதாளம் படத்தில் நடித்த இவருக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிக்காமல் சற்று விலகி இருந்த லட்சுமி மேனனுக்கு புலிகுத்தி பாண்டி திரைப்படம் வெளியானது. மேலும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ள சிப்பாய் திரைப்படமும் பல ஆண்டுகளாக வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

யோகிபாபுவுக்கு ஜோடியாக
மிகச் சிறந்த நடிகை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட லட்சுமிமேனன் திடீரென நடிக்காமல் இருந்த திரை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். காதல் கலந்த காமெடி கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காமெடியனாக அறிமுகமாகியிருந்தாலும் ஹீரோவாக யோகி பாபு நடிக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக வெளியான மண்டேலா திரைப்பட விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று விருதுகளை குவித்தது. இந்த நிலையில் யோகிபாபுவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க இருப்பது தமிழ் திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.