ப்பா.. என்னா நடை.. லக்ஷ்மி மேனான இது.. ஜீன்ஸ் டிஷர்ட்டில் செம கெத்து போங்க.. தீயாய் பரவும் வீடியோ!

Recommended Video

Kumki Lakshmi Menon in a Secret Shoot | Viral Video | Shooting Spot

சென்னை: நடிகை லக்ஷ்மி மேனனின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

நடிகை லக்ஷ்மி மேனன் மலையாளத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சசிக்குமார் நடிப்பில் வெளியான சுந்தரப்பாண்டியன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் லக்ஷ்மி மேனனின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

லக்ஷ்மி மேனன்

லக்ஷ்மி மேனன்

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி படத்தில் நடித்தார் நடிகை லக்ஷ்மி மேனன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ஹிட்டானதால் ஏராளமான படங்களில் கமிட்டானார் லக்ஷ்மி மேனன். மீண்டும் சசிக்குமாருடன் குட்டிப்புலி படத்தில் நடித்தார்.

பெரும் பிரேக்

பெரும் பிரேக்

பின்னார் விஷாலுடன் இணைந்து பாண்டிய நாடு படத்தில் நடித்தார். இந்த படமும் பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக விஷாலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பிரேக்கை கொடுத்தது. அவர்களின் கூட்டணி வெற்றி பெற்றதால் நான் சிகப்பு மனிதன் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

கொம்பன்

கொம்பன்

இதைத் தொடர்ந்து விமலுடன் மஞ்சப்பை, சித்தார்த்துடன் ஜிகர்தண்டா என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். கார்த்தியுடன் லக்ஷ்மி மேனன் இணைந்து நடித்த கொம்பன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு வேதாளம் படத்தில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக நடித்தார்.

டான்ஸ் பயிற்சி

டான்ஸ் பயிற்சி

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் றெக்க என்ற படத்தில் நடித்தார் லக்ஷ்மி மேனன். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் ஓவர் வெயிட் போட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாக தகவல் வெளியானது. அதோடு அவர் டான்ஸ் பயிற்சியளிப்பதாகவும் தகவல் பரவியது.

செம கெத்தாக

செம கெத்தாக

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடிகை லட்சுமி மேனனின் வீடியோ ஒன்று வெளியாகி ரசிர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஒரு சிறிய குழந்தையுடன் நடந்து செல்கிறார் லக்ஷ்மி மேனன். நீல நிற ஜீன்ஸ், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்து செம கெத்தாக நடந்து செல்கிறார் லக்ஷ்மி மேனன்.

அடுத்த படத்தின்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு லக்ஷ்மி மேனன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரது வீடியோ தற்போது வெளியாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த வீடியோ லக்ஷ்மி மேனன் நடித்து வரும் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்ததாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X