Don't Miss!
- News
புதன் பெயர்ச்சி பலன் 2023: மகரத்தில் சூரியன் புதன் கூட்டணி..இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சாக்கடை என தெரியாமல் கல் எறிந்துவிட்டேன்.. வனிதா குறித்து பிரபல நடிகை பரபரப்பு பேச்சு!
சென்னை: நடிகை வனிதா ஒரு சாக்கடை என தெரியாமல் கல்லெறிந்து விட்டேன் என பிரபல நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான வனிதா சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார்.
விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.
நடனமாடிய கையோடு மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய வனிதா.. பிக்பாஸ் ஜோடிகள் புரமோ!

கருத்து வேறுபாடு
இதனை தொடர்ந்து நடிகர் ஆகாஷூடன் திருமணம் செய்துக்கொண்டார் வனிதா விஜயகுமார். அவருடன் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றுக்கொண்ட வனிதா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

காதல் உறவு
பின்னர் ஆனந்த் ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார் வனிதா. அவருடன் ஒரு பெண் குழந்தை பிறக்க, அவரையும் விவாகரத்து செய்த வனிதா பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் உறவில் இருந்தார்.

பிக்பாஸ் சீசன் 3
அந்த காதலும் முறிய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

பீட்டருடன் காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ள வனிதா, யூட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அப்போதுதான் தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது.

சர்ச்சையான திருமணம்
கடந்த ஆண்டு பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவது திருமணம் செய்தார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவரை வனிதா அபகரித்து கொண்டதாக புகார் அளிக்க வனிதாவின் திருமணம் சர்ச்சையானது.
Recommended Video

விளாசிய வனிதா
ஆனால் அந்த திருமணமும் 4 மாதங்களில் முறிந்தது. தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த பிரபலங்களை விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பலரையும் அநாகரிகமாக திட்டி தீர்த்தார் வனிதா.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேரலையில் தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை வனிதா குறித்து மீண்டும் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

ஒரு முறை கல்லெறிந்துவிட்டேன்
அதாவது, வனிதா ஒரு சாக்கடை. ஒருமுறை தெரியாமல் சாக்கடையில் கல் எறிந்து விட்டேன். தற்போது விலகிச் செல்வதுதான் நல்லது எனக் கூறியுள்ளார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டதற்கு அவர் நீதிமன்றத்திற்கு பயப்படுவதில்லை. ஆகையால் நான் வழக்கு தொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

கருத்தால் பரபரப்பு
ஏற்கனவே வனிதாவுக்கும் லக்ஷ்மி ராம கிருஷ்ணனுக்கும் ஆகாத நிலையில், அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சீனியர் பெண் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதால் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.