லிப் காட்சியா No... ஏமாந்துபோன விஷ்ணு விஷால்.. ஆர்யன் படத்தின் சுவாரசியம்!
சென்னை: பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆர்யன் திரைப்படம் வரும் 31ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் முத்தக் காட்சியில் நடிகை மானசா சௌந்திரி நடிக்க மருத்ததாக தெரிவித்துள்ளார்.
திரில்லர் படமாக உருவாக்கியுள்ள ஆர்யன் படத்தை இயக்குநர் பிரவீன் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் நடித்த "எஃப்.ஐ.ஆர்" படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகி உள்ளது. ஆர்யன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், விஷ்ணு விஷாலின் மகன் ஆர்யன் போலீஸ் சீருடையில் தந்தை விஷ்ணு விஷாலை கைது செய்து கை விலங்கிட்டு அழைத்து வந்தார். நிகழ்ச்சியின் ஆரம்பமே மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ஆர்யன் திரைப்படம்: இதில் பேசிய விஷ்ணு விஷால், எனக்கு இந்த இடம் கிடைக்க காரணமே பத்திரிக்கையாளர்களாகி நீங்கள் தான். க்ரைம் படம் என்றாலே அதற்கு விஷ்ணு விஷால் சரியாக இருப்பார் என நினைக்கிறார்கள். அது தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அனைத்து மொழியிலும் திரில்லர் திரைப்படம் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், அந்த படத்தை மீறய ஒரு திரைப்படம் தான் ஆர்யன். இந்தப்படத்தை பொறுத்த வரை செல்வராகவன் சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு அவருக்கு நான் மனமார்த்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக, உங்கள் உழைப்பும் ஒரு காரணம். ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். படத்தின் முதல் 30 நிமிடத்தை அவர் தான் தாங்கியுள்ளார்.
லிப் லாக் காட்சி வேண்டாம்: படத்தின் நடிகை மானசா சௌத்ரி படத்தல் லேட்டாக வந்தார், இருந்த போதும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு லிப்லாக் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என மானசா சௌத்ரியிடம் கேட்டோம். ஆனால், அவர் நான் ஏற்கனவே சில படங்களில் முத்தக் காட்சியில் நடித்து விட்டேன் மீண்டும் அதே போன்று நடித்தால் எனக்கு முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறினார். அவர் சொன்னதை டைரக்டர் என்னிடம் சொன்னார். அவர் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால், நான் இதுவரை லிப் காட்சியில் நடித்ததே இல்லை என்று சொன்னோன். ஆனாலும், ஒரு நடிகராகவும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும் லிப் லாக் காட்சியை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். இப்படத்தில் எனக்காக அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். ஒரு புது விஷயம் முயற்சியை கையில் எடுத்து உள்ளோம் நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது என்று விஷ்ணு விஷால் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











