twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோசியல் மீடியாவில் மார்பிங் போட்டோ, அவதூறு கருத்து.. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்!

    By
    |

    ஐதராபாத்: தன்னைப் பற்றி அவதூறான, ஆபாச கருத்துகளை முகம் தெரியாத சிலர் வெளியிட்டு வருவதாக பிரபல நடிகை போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

    பிரபல தெலுங்கு நடிகை மாதவி லதா. அங்கு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    நட்சத்திரமா ஜொலிக்கும் நக்‌ஷத்ரா.. தீயாய் பரவும் திருமண நிச்சயதார்த்த வீடியோ.. முத்தங்கள் வேற! நட்சத்திரமா ஜொலிக்கும் நக்‌ஷத்ரா.. தீயாய் பரவும் திருமண நிச்சயதார்த்த வீடியோ.. முத்தங்கள் வேற!

    தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

    போட்டியிட்டு தோற்றார்

    போட்டியிட்டு தோற்றார்


    பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஆந்திராவில் நடந்த பொதுத்தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில், குண்டூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தேர்தலில் தோற்றாலும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் அவ்வப்போது பரபரப்பு பேட்டி அளித்து வருவார்.

    போதைப் பொருள்

    போதைப் பொருள்

    சில மாதங்களுக்கு முன் பெங்களூரை போல தெலுங்கு சினிமாதுறையிலும் போதைப் பொருள் பார்ட்டிகள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். 'தெலங்கானா போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டோலிவுட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள்களோடு நடக்கும் பார்ட்டிகள், இங்கு சர்வ சாதாரணம் என்று கூறியிருந்தார்.

    ஆபாசமாக

    ஆபாசமாக

    இந்நிலையில், இவர் சைபராபாத் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை சிலர் ஆபாசமாக சித்தரித்துள்ளதாகவும் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    மார்பிங் போட்டோ

    மார்பிங் போட்டோ

    இதுபற்றி மாதவி லதா கூறும்போது, ஆந்திராவில் கோயில்களுக்கு எதிரான தாக்குதல் களுக்காகக் குரல் கொடுத்தேன். இதற்கு பிறகு முகம் தெரியாத சிலர், வெறுக்கத்தக்க கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எனது புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றி வருகின்றனர்.

    தனிப்பட்ட வாழ்க்கை

    தனிப்பட்ட வாழ்க்கை

    என் கேரக்டர் பற்றியும் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். எனக்கு எதிராக மோசமானப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Madhavi Latha lodged a complaint with the Cyberabad police against miscreants posting derogatory comments against her on social media platforms.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X