23 ஆண்டு திருமண வாழ்க்கை.. காதல் கணவருடன் இருந்த போட்டோக்களை ஷேர் செய்து கலங்கும் மந்திரா பேடி!
மும்பை: 23 ஆண்டு திருமண வாழ்க்கை என தனது காதல் கணவருடன் இருந்த தருணங்களை ஷேர் செய்து நடிகை மந்திரா பேடி கலங்கியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான மந்த்ரா பேடி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சாந்தி என்ற சீரியலின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த போதும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டு போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராகவும் இருந்தார்.

மன்மதன்
இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் பாலிவுட் படங்களிலும் நடித்த வந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்' படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வெப் தொடர்
கடந்த ஆண்டு வெளியான 'சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் மந்திரா பேடி. மந்திரா பேடி பிரபல இயக்குநரான ராஜ் கவுஷலை கடந்த 1999ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்
இரண்டு ஆண்டு தீவிர காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்த நிலையில் இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.

கணவர் திடீர் மரணம்
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மாரடைப்பால் மரணமடைந்தார். காதல் கணவரின் மரணத்தால் நிலைகுலைந்து போனார் நடிகை மந்திரா பேடி.

இன்னும் மீளவில்லை
தனது காதல் கணவருக்கு தானே இறுதிச் சடங்குகளை செய்த மந்திரா பேடி அவரது உடலையும் தூக்கி சுமந்தார். அந்த போட்டோக்கள் வெளியாகி பலரையும் கலங்க செய்தது. கணவரை இழந்த துக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை மந்திரா பேடி.

கணவருடன் இருந்த போட்டோஸ்
தொடர்ந்து அவருடன் இருந்த அன்பான தருணங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது கணவருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் மந்திரா பேடி.

திருமணமாகி 23 ஆண்டுகள்
மேலும் ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டு 5 ஆண்டுகள். திருமணமாகி 23 ஆண்டுகள்.. எல்லா போராட்டங்களின் மூலமும்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மந்திரா பேடியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











