twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெல்லி பல்கலைக்கழகத் தாக்குதல்... 'இந்த அரசியலை ஏற்க முடியாது...' நடிகை மஞ்சுவாரியர் ஆவேசம்

    By
    |

    கொச்சி: டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் நடந்த தாக்குதலுக்கு நடிகை மஞ்சுவாரியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் நேற்று ஒரு கும்பல் நுழைந்தது. முகத்தை துணியால், மறைத்து இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளுடன் நுழைந்த அந்தக் கும்பல் மாணவர்களை சரமாரியாகத் தாக்கியது.

    விடுதியை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் வெறியாட்டம் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர் சஙகத் தலைவர் அயிஷ் கோஷ் மண்டை உடைந்தது. சுமார் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    மாணவர்கள், மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தீவிரவாத தாக்குதலை ஞாபகப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

    ஹிட்லர் ஆட்சியில்

    ஹிட்லர் ஆட்சியில்

    ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்க தொடங்கியுள்ளதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் தெரிவித்துள்ளார்.

    மஞ்சு வாரியர்

    மஞ்சு வாரியர்

    இந்த தாக்குதலுக்கு நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியரும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:

    அதிர்ச்சி அடைந்தேன்

    அதிர்ச்சி அடைந்தேன்

    மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பலரது முகத்தில் தெரிந்த ரத்தக்காயங்கள் வேதனையை தந்தன. நேரு பல்கலைக்கழகம், இந்திய அறிவின் சின்னம். அங்கு படித்தவர் பலர் இன்றும் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக் கிறார்கள்.

    அரசியல் வேறானது

    அரசியல் வேறானது

    அவர்களின் அரசியல் வேறானது என்றாலும் அவர்களின் தேசப்பக்தி கேள்விக்கு உள்ளாக்கப் பட்டதில்லை. வேறுபாடுகள் இருந்தாலும் கலவரத்தை உருவாக்கியதில்லை.

    ஏற்க முடியாது

    ஏற்க முடியாது

    ஆட்களை அழைத்துவந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும்போது, அவர்கள் அரசியல் எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முடியாது. பல்கலையில் தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பிய பெரும்பாலான தாய்மார்கள் சாதாரணமானவர்களே.

    புறக்கணிக்க முடியாது

    புறக்கணிக்க முடியாது

    ரத்தக் கறை படிந்த மாணவர்களின் முகங்களை பார்க்கும்போது, அவர்கள் மனநிலை என்ன பாடுபடும்? அதனால் அவர்களை புறக்கணிக்க முடியாது. நானும் மாணவர்களோடு நிற்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Manju Warrier condemned the violence at the JNU in New Delhi. The actress said that she was shocked to see the faces from JNU and the politics of violence under the cover of darkness, however, it cannot be supported at all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X