»   »  அரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

அரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட ஆச்சி மனோரமாவின் 78 வது பிறந்தநாளில், அவர் குறித்த சில விவரங்களை நினைவு கூறலாம்.

Actress Manorama 78th Birthday

*நாடக நடிகை, காமெடி நடிகை, பாடகி, வில்லி, தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்டவர்.

*தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

Actress Manorama 78th Birthday

*5 முதல்வர்களுடன் சேர்ந்து நடித்தவர், 5 தலைமுறையினரை தனது நடிப்பால் மகிழ்வித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.

*4 தலைமுறை நடிக, நடிகையருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

Actress Manorama 78th Birthday

*நடிகையாக அறிமுகமான முதல் படம் மாலையிட்ட மங்கை. கடைசியாக நடித்த படம் சிங்கம் 2.

*காமெடி என்றாலே நடிகர்கள் மட்டும்தான் என்ற நிலையை மாற்றி நடிகைகளும் காமெடி செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியவர்.

*கொஞ்சும் குமரி, அலங்காரி, பெரிய மனிதர், அதிசய பெண், குன்வாரா பாப்(இந்தி) போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Actress Manorama 78th Birthday

*1989 ம் ஆண்டு புதிய பாதை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

*வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம ஸ்ரீ(2002) போன்ற விருதுகளையும் வென்றிருக்கிறார்.

*கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மனோரமா இறந்து போனார்.

*ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.

Actress Manorama 78th Birthday

*மனோரமாவின் மறைவு குறித்து 'மனோரமாவையும் தமிழ் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது' என மருத்துவர் ராமதாஸ் கூறினார்.

*'தமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும்' என ரசிகர்கள் தமிழ் மொழியுடன் மனோரமாவை ஒப்பிட்டு அஞ்சலி செலுத்தினர்.

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனோரமா விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது...

English summary
The Veteran actress Manorama on her birth Anniversary Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil