»   »  தமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும் - ரசிகர்கள் உருக்கம்

தமிழ்போல எந்நாளும் மனோரமா புகழ் நிலைத்திருக்கும் - ரசிகர்கள் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த நடிகையும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவருமான நடிகை மனோரமா நேற்று இரவு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.

மனோரமாவின் மறைவு தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, அவரின் மறைவு செய்தி அறிந்த நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மனோரமாவின் மறைவு குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களின் பகிர்வுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தமிழ்போல எந்நாளும்

"நடிப்புக்கு இலக்கணம் கற்பித்த தமிழச்சியே, தமிழ் போல் எந்நாளும் மங்காது உன் புகழ் நிலைத்திருக்கும்" என்று ரசிகர் பவித்ரன் கூறியிருக்கிறார்.

ஒரே நாளில்

"பல நாட்கள் அனைவரையும் சிரிக்க வைத்த மனோரமா ஒரே நாளில் அனைவரையும் அழ வைத்து சென்றுவிட்டார்" என்று கூறியிருக்கிறார் மங்காத்தா.

இந்தியன் படம்

"இந்தியன் படத்தில் அவரது நடிப்பு என்னை இன்று வரை லஞ்சம் வாங்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது" என்று ரவிராஜன் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து வாழ்வார்கள்

மரணமும் இறப்பும் சாதாரண மனிதர்களுக்குத்தான். மனோரமா போன்றவர்கள் மறைகிறார்கள்,கண்களுக்குத் தெரிவதில்லை ஆனால் தொடர்ந்து வாழ்கிறார்கள்" என்று உருக்கமாக கோவிந்தராஜன் ஜீவன் தெரிவித்திருக்கிறார்.

சரித்திரமாக

"மறைந்துவிட்ட பெரியாச்சி மறக்கமுடியா தமிழச்சி ஆச்சி.சாதனையும் செய்தாச்சி,சரித்திரமா போயாச்சி"என்று அன்புச்செல்வன் என்னும் ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
Veteran Actress Manorama who Passed away last night - Fans Tributes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil