’ஆச்சி’ மனோரமாவுக்கு மகன்தான் எல்லாமே.. பூபதிக்குள் இத்தனை திறமைகளா?.. ச்ச இப்படி போயிட்டாரே
சென்னை: கோலிவுட் ரசிகர்களால் கடைசிவரை 'ஆச்சி' என அன்போடும், உரிமையோடும் அழைக்கப்பட்டவர் மனோரமா. 1,500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவருக்கு பூபதி என்ற மகன் இருந்தார். அவரும் குடும்பம் ஒரு கதம்பம், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும்; பெரிய வெற்றி கிடைக்கவில்லை. திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகைகளில் ஒருவர் மனோரமா. பள்ளத்தூரில் பிறந்து நாடகங்களில் ஈர்க்கப்பட்டு நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர்; கோலிவுட்டில் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தவர். சிவாஜி, எம்ஜிஆர் என பலருடன் நடித்திருக்கும் அவர்; காமெடியில் கலக்கியவர். அவரது நடிப்பை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனே பயந்த காலமெல்லாம் உண்டு.
என்ன ஸ்பெஷல்?: மனோரமாவின் ஸ்பெஷலே அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும்தான். அவர் நடிக்கும்போது நமது வீட்டிலிருந்து ஒருவர் நடிப்பது போன்று இருந்தது. இதன் காரணமாகத்தான் அவரை தங்களில் ஒருவராக பார்த்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு உயிரிழந்த அவர் ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். சில காரணங்களால் இரண்டு பேருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. அந்தத் தம்பதிக்கு பிறந்தவர்தான் பூபதி.

திரைத்துறையில் பூபதி: தனது மகனை எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகராக மாற்றிவிட வேண்டும் என்று ஆசைபட்டார் மனோரமா. பூபதிக்கும் இயல்பிலேயே நடிக்கும் திறமை இருந்தது. அதனை பயன்படுத்தி விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமான அவர்; தொடர்ந்து உதிரிப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் பெரிய திருப்புமுனை எதுவும் கிடைக்கவில்லை. மனோரமாவும் தனது பங்குக்கு மகனை வைத்து படமும் தயாரித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மனோரமாவுக்கு பூபதிதான் எல்லாமுமாக இருந்தார். அவர் இறந்தபோது தனது மகனை வெல்ல வைக்க முடியவில்லையே என்ற சோகம்தான் ஆச்சிக்கு இருந்தது.
மதுவுக்கு அடிமை: ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய பூபதி மதுவுக்கு அடிமையாகிவிட்டார். கொரோனா காலகட்டத்தில் போடப்பட்ட லாக் டவுனால் மது கிடைக்கவில்லை; எனவே தூக்க மாத்திரையை போடும் அளவுக்கு அவரது நிலைமை சென்றது. அப்போது சிகிச்சை பெற்று மீண்ட அவர்; இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு நடிகர்கள் கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நாளை இறுதி சடங்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திறமையாளர் பூபதி: இந்நிலையில் அவர் பற்றிய ஏராளமான விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. பூபதிக்கு அடிப்படையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் இருந்ததோடு இல்லாமல்; மிகச்சிறந்த பாடகராகவும் ஜொலித்தவராம். நடிப்பு கைகொடுக்கவில்லை என்றாலும் தன்னிடம் இருக்கும் பாடும் திறமையை வைத்து திரைத்துறையில் வென்றுவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தாராம். ஏகப்பட்ட திருமண விழாக்களில் பூபதியின் கச்சேரி களைகட்டிய காலமெல்லாம் உண்டாம்.
அவர் பாட ஆரம்பித்தால் மனோரமா மட்டுமின்றி அனைவருமே மெய்மறந்து கேட்பார்களாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இசை துறையும் பூபதியை கைவிட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஒருமுறை நாடகத்தில் மனோரமா நடித்துக்கொண்டிருந்தபோது அவர் அடி வாங்கும்படி காட்சி வந்திருக்கிறது. இதனை பார்த்து பொறுக்க முடியாத பூபதி எப்படி எனது தாயை அடிக்கலாம் என்று சொல்லி சண்டைக்கும் சென்றாராம். இப்படி அதீத பாசத்தை தாய் மீது அவர் வைத்திருந்திருக்கிறார்.
ஒருகாலகட்டத்தில் மனோரமாவும் உயிரிழந்துவிட்டார். திரை வாழ்க்கையில் அடி, திறமை இருந்தும் முன்னேற முடியாத விரக்தி, தாயின் உயிரிழப்பு என இத்தனையும் சேர்ந்து பூபதிக்கு தீராத சோகத்தை கொடுத்ததாகவும் அதனால்தன் மது பழக்கத்துக்குள் சென்று அதற்கு அடிமையானதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் அவர் கொஞ்சம் தடுமாறினாலும் தனது குடும்ப விஷயத்தில் ரொம்பவே கான்சியஷாக இருந்ததாகவும்; தனது பிள்ளைகளை மிக அற்புதமாகவும் வளர்த்துவிட்டார். பூபதியின் ஒரு மகன், இரண்டு மகள்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி வென்றிருக்கிறார்கள். மகன் மருத்துவராக இருக்கிறார்., மகள்களில் ஒருவர் M.sc Phsycology, இன்னொருவர் M.Phil Corporate Secerataryship படித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











