மது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட மனோரமாவின் மகன்.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகி மற்றும் குணச்சித்திர நடிகையாக கோலோச்சியவர் நடிகை மனோரமா. மேடை நாடக கலைஞராக தனது கேரியரை தொடங்கினார் மனோரமா.
நடிகை 1500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் நடித்ததால் 1985ஆம் ஆண்டே கின்னஸ் பட்டியலில் இடம் பிடித்தார் மனோரமா.

நடிகர்கள்
தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் குவித்திருக்கிறார் மனோரமா. சினிமாத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சந்திரபாபு, நாகேஷ், சோ ராமசாமி முதல் செந்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார் மனோரமா.

மரணம்
சிவாஜி, எம்ஜிஆர் உட்பட ரஜினி, கமல், விஜயகாந்த், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடனுன், அம்மா மற்றும் பாட்டி கதாபாத்திரங்கள் நடித்து இருக்கிறார். திரைத்துறையினரால் ஆச்சி என்ற அழைக்கப்பட்ட மனோரமா கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உடல் நலக்குறைவால் தனது 78 வயதில் காலமானார்.

பூபதிக்கு உடல்நலக்குறைவு
மனோரம்மாவுக்கு பூபதி என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூபதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிக தூக்க மாத்திரைகள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்காததால் பூபதி போதைக்காக அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











