தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மீனா… இணையத்தில் ட்ரெண்டாகும் செலிப்ரேஷன் வீடியோ

சென்னை: முன்னணி நடிகையான மீனா நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நெருங்கிய தோழிகள், நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மீனா தனது தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது.

கோலிவுட் கண்ணழகி மீனா

கோலிவுட் கண்ணழகி மீனா

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த மீனா, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். 'ஒரு புதிய காதல்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான மீனா, 'என் ராசாவின் மனசிலே' படம் மூலம், மிகவும் பிரபலமானார். மீனாவின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது ரஜினியுடன் அவர் நடித்த எஜமான் திரைப்படம். தனது கண்ணழகால் ரசிகர்களை கவர்ந்திழுத்த மீனா, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பெரிய ரவுண்டு வந்தார்.

கணவர் இல்லாமல் முதல் பிறந்தநாள்

கணவர் இல்லாமல் முதல் பிறந்தநாள்

ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, சத்யராஜ், பிரபு, அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியுள்ள மீனா, 2009ல் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களது மகள் நைனிகாவும் விஜய்யுடன் 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மீனா குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நிலையில், அவரது கணவர் வித்யாசாகர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், நடிகை மீனா திருமணத்திற்குப் பின்னர் தனது கணவர் இல்லாமல் முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

மீனாவுக்கு ஆதரவாக இருக்கும் தோழிகள்

மீனாவுக்கு ஆதரவாக இருக்கும் தோழிகள்

மீனா மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் மூலம் கம்பேக் கொடுத்ததோடு, ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். இந்நிலையில், கணவரை இழந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவுக்கு திரையுலகைச் சேர்ந்த தோழிகள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். கலா மாஸ்டர், நடிகைகள் ரம்பா, சினேகா, சங்கவி, சங்கீதா ஆகியோர் மீனாவுக்கு உறுதுணையாக இருந்து அவரை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மீனாவின் பிறந்தநாளையும் அவரது தோழிகள் செம்மையாக செலிப்ரேட் செய்துள்ளனர்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

கணவர் வித்யாசாகர் இறந்த பின்னர் நடிகை மீனா கொண்டாடும் 46வது பிறந்தநாளுக்கு அவரது தோழிகள் ரம்பா, கலா மாஸ்டர், சினேகா உட்பட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அதேபோல் சினேகாவின் அக்கா கீதா, மீனாவை கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாட வைத்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மீனாவின் தோழிகளும் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். தனிமையில் இருக்கும் மீனாவை மகிழ்ச்சிப்படுத்த அவரது தோழிகள் கேக் வெட்ட வைத்து பிறந்தநாளை கொண்டாட வைத்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X