நம்பவே முடியல... 37 வருஷமாச்சு… அன்புள்ள ரஜினிகாந்த் படம் குறித்து மனம் திறந்த மீனா!
சென்னை : அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 37 வது ஆண்டை நிறைவு செய்கிறது. இப்படத்தில், ரஜினி அங்கிளை சந்தித்த அனுபவங்களை நடிகை மீனா பகிர்ந்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதையாக வலம் வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை மீனா.
ரஜினிகாந்த்,கமல்,சரத்குமார்,விஜயகாந்த்,அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

கண்ணழகி
1981ம் ஆண்டு, துறுதுறுப்பான செய்கையாலும், அழகாலும் சிவாஜியின் கண்களை ஈர்த்தார் மீனா. இதையடுத்து, மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த்
1984ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ந் தேதி வெளியானத் திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இத்திரைப்படத்தை, கே நட்ராஜ் இயக்கி இருப்பார். இப்படத்தில் அம்பிகா, ரஜினி, ஒய் ஜி மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் ஆகவே நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

37 ஆண்டுகளை நிறைவு
அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ரஜினி மீனாவுக்கு சாக்லெட் கொடுக்கும் காட்சியில், மீனா முகம் சுளித்துக்கொண்டு சாக்லெட்டை துப்பும் காட்சி இடம் பெற்று இருக்கும். இந்த காட்சி எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்று மீனா கூறியுள்ளார்.

ரஜினி ஆங்கிள்
மேலும், ரஜினி ஆங்கிள் என்ற கூப்பிட்ட காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அந்த தருணத்தை தற்போது நினைக்கும் போது கூட மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் மீனா கூறினார். அந்த திரைப்படம் வெளியானது என்னமோ இப்போதுதான் என்பது போல இருக்கிறது. அதற்குள் 37 ஆண்டுகள் உருண்டோடிவிட்டதாக மீனா கூறினார்.

இயக்குனருக்கு நன்றி
அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தின் 36வது ஆண்டிலும் அப்படத்தை நினைவுபடுத்தி இன்ஸ்டாகிராமில் மீனா பதிவிட்டு இருந்தார். அதில், ரோஸி கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனருக்கும், படப்பிடிப்பில் எனக்கு பக்கபலமாக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி என பகிர்ந்து இருந்தார்.

கதாநாயகியாக
அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தை அடுத்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா. 1990ம் ஆண்டு புதிய கதை படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமாகி கொடிகட்டி பறந்தார். மேலும், முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாகவும் நடித்தார்.

திருமணம்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துள்ளார். இவர் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

மீனாவின் மகள் நைனிகா
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவான தெறி திரைப்படத்தில், மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அப்படத்தில் அவர் கொஞ்சும் மழலை மொழியில் பேபி என்றும் சொல்லுவது மிகவும் வைரலானது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு நைனிகா வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











