Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கடந்து போறதுதானே வாழ்க்கை.. கடந்து வரும் மீனா.. தோழியுடன் வீடியோ பகிர்வு!
சென்னை : நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தனது கேரியரை துவக்கி தற்போது வரை நடித்து வருகிறார்.
வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை மீனா திருமணம் செய்த நிலையில், அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
இந்த இழப்பால் முடங்கிப் போயிருந்த மீனா, தற்போது தன்னுடைய தோழிகளின் கைகளை பிடித்தபடி மீண்டு வருகிறார்.
என்
உடல்..
என்
உடை..
என்
வாழ்க்கை..
கருத்து
சொன்னவர்களை
கண்டித்த
பாடகி
பூஜா
வைத்தியநாத்!

நடிகை மீனா
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாகவே ரசிகர்களை வசீகரித்தவர். ரஜினி, சிவாஜி உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். குறிப்பாக ரஜினியுடன் இவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அனாதை ஆசிரமத்தில் வளரும் நோய்வாய்ப்பட்ட குழந்தையாக மீனா நடித்திருந்தார்.

நாயகியாக மீனா
தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, சிறிது காலத்திலேயே நாயகியாகவும் நடிக்கத் துவங்கினார். ராஜ்கிரணுடன் இவர் நடித்திருந்த என் ராசாவின் மனசிலே படம் கோலிவுட்டில் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. அப்பாவி பெண்ணாக, அச்சத்தை கண்களில் காட்டிய இந்த கேரக்டர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

ரஜினியுடன் ஜோடியாக நடித்த மீனா
இந்தக் கேரக்டரை தொடர்ந்து ரஜினியுடன் நடித்த எஜமான் படத்திலும் அழகான கேரக்டரில் தோன்றி இடையிலேயே இறந்து விடுவார். ரசிகர்களை இந்தக் கேரக்டர் அதிகமாக பாதித்தது. அடுத்தடுத்த பல வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார் மீனா.

துறுதுறுப்பான நடிப்பு
தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பால் தென்னிந்திய அளவில் சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன போதிலும் நடிப்பை விட்டுவிடவில்லை. இவருடைய மகள் நைனிகாவும் சில படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன் நைனிகா
விஜய்யுடன் இணைந்து நைனிகா நடித்த தெறி படம் அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று ரசிகர்களை நைனிகாவை கொண்டாடினர். கணவர் மற்றும் குழந்தையுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் மீனா. கடந்த ஆண்டு தன்னுடைய திருமண நாளையொட்டி சிறப்பான பதிவையும் பகிர்ந்திருந்தார்.

கணவரின் மரணம்
இந்த நேரத்தில்தான் அவரது வாழ்க்கையில் விதி தன்னுடைய கைவரிசையை காட்டியது. சமீபத்தில் மல்ட்டி ஆர்கன் பெயிலியர் காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தார். இந்த இழப்பு மீனாவை முடக்கியது. ஒடிந்துப் போனார். தன்னுடைய மகளுடன் செய்வதறியாது தவித்தார்.

கைக்கொடுத்த தோழிகள்
இந்நிலையில் மீனாவின் திரையுலக தோழிகள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளனர். சங்கவி, ராதிகா, சங்கீதா, ரம்பா, கலா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் மீனாவை தேற்றினர். சமீபத்தில் மீனாவின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினர். நடிகை ராதிகா, மீனாவை தனியாக அழைத்து சென்று ட்ரீட் கொடுத்தார்.

மீனாவின் புதிய வீடியோ
இந்நிலையில் இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது நன்றியை தெரிவித்தார் மீனா. தோழிகளின் கைகளை பிடித்துக் கொண்டு, தன்னுடைய சோகத்தில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார். தற்போது தன்னுடைய தோழியுடன் இணைந்து இவர் புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார். பழைய வீடியோவாக இருந்தாலும் மிகவும் கலர்புல்லாக உள்ளது அந்த வீடியோ.