Don't Miss!
- Sports
"உங்க பாட்ஷா இனியும் பழிக்காது".. மைண்ட் கேம் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்.. அஸ்வின் தந்த தரமான பதிலடி
- News
அசாமில் குழந்தை திருமணம்: கைது பண்ணுறது சரி..கைதானவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கு யார் பொறுப்பு..ஒவைசி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உயர உயர பறக்கணும்.. பிறந்தநாளில் மகளுக்கு நடிகை மீனா வாழ்த்து!
சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி நாயகியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை மீனா.
கமல், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்த மீனா, தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்த நிலையில், சில மாதங்கள் முடங்கியிருந்த மீனா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை மீனா
நடிகை
மீனா
குழந்தை
நட்சத்திரமாக
ரஜினிகாந்த்,
சிவாஜி
உள்ளிட்டவர்களுடன்
நடித்தவர்.
குழந்தை
நட்சத்திரமாகவே
ரசிகர்களை
கவர்ந்த
இவர்,
ரஜினியுடன்
அன்புள்ள
ரஜினிகாந்த்
படத்தில்
நடித்து
சிறப்பான
நடிப்பை
வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து
நாயகியாகவும்
நடித்த
இவரை
ரசிகர்கள்
கொண்டாடினர்.
ரஜினியுடன்
குழந்தை
நட்சத்திரமாக
நடித்த
இவர்
அவருடனேயே
ஜோடியாக
நடித்து
அனைவரையும்
கவர்ந்தார்.

முன்னணி நடிகை மீனா
ரஜினியுடன்
எஜமான்
படத்தில்
இவர்
ஏற்று
நடித்திருந்த
வைத்தீஸ்வரி
கேரக்டர்
சிறிது
நேரமே
வந்தாலும்
படத்தில்
மிகப்பெரிய
தாக்கத்தை
ஏற்படுத்தியது.
தொடர்ந்து
ரஜினியின்
எவர்கிரீன்
படமான
முத்து
படத்திலும்
மீனா
ஜோடி
சேர்ந்திருந்தார்.
இந்த
ஜோடி
மிகப்பெரிய
கெமிஸ்ட்ரியை
வெளிப்படுத்தியது.
ரஜினியுடன்
மட்டுமில்லாமல்
கமல்,
சத்யராஜ்,
சரத்குமார்
உள்ளிட்ட
முன்னணி
நடிகர்களுடன்
ஜோடி
சேர்ந்து
நடித்தார்
மீனா.

தென்னிந்திய மொழிப்படங்களில் மீனா
தொடர்ந்து காலத்திற்கேற்றாற் போல தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் மீனா. தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் இவரை காண முடிகிறது.

விஜய்யுடன் தெறிக்கவிட்ட நைனிகா
மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தற்போதும் நடித்து வருகிறார் மீனா. த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வரும் மீனாவின் மகள் நைனிகாவும் விஜய், அரவிந்த் சாமி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த தெறி படம் மாஸாக அமைந்தது.

முடக்கிப்போட்ட மரணம்
இவர்களின் கேரியர் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு அந்தக் குடும்பத்தை இடியென தாக்கியுள்ளது. உடல் உறுப்பு செயலிழப்பு காரணமாக வித்யாசாகர் உயிரிழந்த நிலையில், மிகவும் உடைந்து போனார் மீனா. அந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் தவித்த அவரை சக தோழிகள் தேற்றினர். நைனிகாவை ஆறுதல் படுத்தும் வகையில் தன்னை மாற்றிக் கொண்டு அந்த சோகத்திலிருந்து தற்போது மீண்டுள்ளார் மீனா.

மீண்டுவந்த மீனா
தற்போது இவரை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பார்க்க முடிகிறது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் மீனா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய 46வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டினார். மேலும் தற்போது புத்தாண்டை பிரான்சில் இவர் கொண்டாடி வருகிறார். இதன் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து
இதனிடையே தன்னுடைய மகள் நைனிகாவின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் சிறப்பான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக நைனிகாவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள மீனா, உயர உயர பற மகளே, உனக்கு வானம்கூட எல்லை இல்லை என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். மேலும் சூரிய கதிர்களை போல பிரகாசமாக சுற்றியிருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடு என்றும் வாழ்த்தியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் ஏராளமான அளவில் நைனிகாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.